தமிழக முதலமைச்சராக திரு.மு.க. ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது என 85 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார் !!

சென்னை 23 மே 2022 தமிழக முதலமைச்சராக திரு.மு.க. ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது என 85 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார் !!

‌தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி உள்ளன.

என்பது பற்றி சிவோட்டர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டடுள்ளது.

அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் இந்த கருத்து கணிப்பு நடைபெற்றது.

இந்த கருத்துக்கணிப்பில் தென் மாநிலங்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபலமான தலைவராக உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

85 சதவீதம் பேர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாகவும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

51 சதவீதம் பேர் திருப்தி என்று கூறியுள்ளனர்.

30 சதவீதம் பேர் மாநில அரசின் செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

பாரத பிரதமர் நரேந்திரமோடி ராகுல் காந்தி ஆகியோர் குறித்தும் தமிழக மக்களிடம் சிவோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிரதமரின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

17 சதவீதம் பேர் திருப்தி என்றும், 40 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் பிரதமராக பதவியேற்க பொருத்தமானவர் மோடியா? ராகுலா? என்றும் கேள்வி கேட்கப்பட்டு தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ராகுல் காந்திக்கு 54 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *