உத்தரப் பிரதேசத்தில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யும் கௌதம் அதானி கூறினார் !

சென்னை 04 ஜூன் 2022 உத்தரப் பிரதேசத்தில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யும் கௌதம் அதானி கூறினார் !

உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஜூன் 3) நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கெளதம் அதானி கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 30,000 பேருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.70,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறோம்.

என அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி அம்மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அதானி..

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் பசுமை ஆற்றல், விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து வணிகம் உள்ளிட்டவற்றில்
ரூ.11,000 கோடி அளவிற்கு முதலீடு செய்தோம்.

இருப்பினும் தற்போது சாலை மற்றும் போக்குவரத்து கட்டுமானத்திற்கு ரூ.24,000 கோடியையும் பாதுகாப்புத் துறைகளில் ரூ.35,000 கோடியையும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

மேலும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகத்தை அமைக்க அதானி குழுமம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
கௌதம் அதானி கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *