பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தினரிடம் வசூலிக்க கூடாது தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.!!
சென்னை 09 ஜூன் 2022 பள்ளிகளை தூய்மைப் படுத்த நிதி பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தினரிடம் வசூலிக்க கூடாது தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.!!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தினரிடம், தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.