அ.தி.முக.வில் பொதுச் செயலாளர் பதவியே இல்லை எடப்பாடி பழனிசாமி!!
சென்னை 09 ஜூன் 2022 அ.தி.முக.வில் பொதுச் செயலாளர் பதவியே இல்லை எடப்பாடி பழனிசாமி!!
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தந்த பதில்,
அதிமுகவில் பொதுச் செயலாளர் என்பதும், ஒற்றைத் தலைமை என்பதும் கற்பனையான விவாதம்.
கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது.
என்னை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு ஆர்வத்தில் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்கள் உடனே அகற்றப்பட்டுவிட்டது என்றார்.