அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.!
சென்னை 19 ஜூன் 2022 அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.!
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பீகார், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது.
ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
பீகாரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்திந்தார்.
இந்தநிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.