அப்பா அம்மா வீட்டில் இல்ல.. பள்ளி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்.. காதலித்த 60 நாளில் கர்ப்பமாக்கிய வெறித்தனம்.

சென்னை 22 மார்ச் 2022 டாடி மம்மி வீட்டில் இல்ல.. பள்ளி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்.. காதலித்த 60 நாளில் கர்ப்பமாக்கிய வெறித்தனம்.

16 வயது பள்ளி மாணவியை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலிக்க பழகிய இரண்டே மாதத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய நிலையில் போலீசார் இந்த இளைஞனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு மாத குழந்தைகள் முதல் அறுபது வயது கிழவி வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடுமைகள் அரங்கேறி வருகிறது. பெண்களை காதலிப்பதாக கூறி  கற்பழித்து ஏமாற்றுதல், நகைக்காக திருமணம் செய்து பின் கைவிடுதல், காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை கற்பழிப்பு செய்வது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் கற்பழிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல்துறை எத்தனை நடவடிக்கைகளை எடுத்தோம் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில்11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை 22 வயதுடைய இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில வாரங்களாக சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி  ஏற்படுவதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர்கள் குரோம்பேட்டை அரசு பொது  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்ததில் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை விசாரித்ததில் நடந்த சம்பவங்களை கூறினார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் அந்த தகவலை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். அதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் ஆய்வாளர் தலைமையில் போலீஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

Read Also  பெலிஸ் நாட்டுக் கொடியேற்றிய ‘ரூபிமா் ’ சரக்குக் கப்பல் செங்கடலில் மூழ்கியது !

அதில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற 22 வயதுடைய இளைஞர் அதே பகுதியில் உள்ள பூச்செடிகள் விற்பனை செய்யும் கார்டனில் வேலை செய்து வருவதாகவும், அப்போது பள்ளிக்கு செல்லும்போது அந்த இளைஞனுக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறி ஆறு மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், இதற்கிடையில் ஐந்து மாதத்திற்கு முன்பு தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு குன்றத்தூர் பகுதியில் காதலன் சுற்றியதாகவும், அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தன்னை காதலன் யாரும் இல்லாத நேரத்தில் அவன் வீட்டிற்கே அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் தான் 4 மாதம் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து விக்னேஷை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை இளைஞர் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *