தனது ரசிகர்களுக்கு பிஸ்சா ட்ரீட் வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்!
சென்னை 01 ஜூலை 2022 தனது ரசிகர்களுக்கு பிஸ்சா ட்ரீட் வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்!
200 ரசிகர்களின் பிஸ்சா ஆசையை நிறைவேற்றிய zomato
July 1, 2022, சென்னை: Zomato (ஜொமேட்டோ) உடன் இசை அமைப்பாளர் அனிருத் இணைந்து உருவாக்கிய ‘சும்மா செம்ம’ என்னும் பெப்பி உணவு பாடல் யூடியூப்பில் இப்போது 70 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக அனிருத் அவரது ட்விட்டர் பக்கத்தில் சில இலவச உணவுகளுடன் தனது ரசிகர்களை தனது இசைக்கு நடனமாட வைக்க அழைத்துச் சென்றார்!
வெள்ளிக்கிழமை காலை அனிருத் இதை ஒரு கொண்டாட்டமாக
மாற்ற வேண்டும் என்று எண்ணி ஜொமேட்டோவுக்கு ட்வீட் செய்து,
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் உள்ள அவரது ரசிகர்களை அதில் சேருமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் தனது ரசிகர்களை சுவாரஸ்யமான பதில்களுடன் தான் ஏன் அந்த விருந்துக்கு தகுதியானவர் என்பதை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த சில மணிநேரங்களில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நகைச்சுவையான பதில்களுடன் ட்விட்டர்ல் இணைந்தனர்.
50 வித்யாசமான பதில்களை ஜொமேட்டோ தேர்ந்தெடுத்து, இலவசமாக உணவை பரிசாக அளித்து தனது ரசிகர்களை உபசரிக்க வேண்டும் என்று அனிருத் அன்புடன் கேட்டுக் கொண்டார்.
மேலும் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைத்து ரசிகர்களுக்கும் தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்ய விளம்பரக் குறியீட்டை வழங்கியது ஜொமேட்டோ. அனிருத் அவர்களுக்கு தனது நகரத்தை எப்படி தனது பாட்டிற்கு நடனம் ஆட வைக்க வேண்டும் என்றும் தனது ரசிகர்களை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்றும் நன்றாக தெரியும். அவரின் இந்த வெற்றி பயணம் என்றும் தொடர வேண்டும் என்று அவர் ரசிகர்களை போல நாமளும் வாழ்த்தி அவர் பாடல்களை கேட்டு மகிழலாம்.