வண்டி வாகனங்களுக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண்கள்.!
சென்னை 03 ஜூலை 2022 வண்டி வாகனங்களுக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண்கள்.!
வண்டி வாகனங்கள் வாங்கும்பொழுது அந்த வாகனங்கள் கடைசிவரை நமக்கு உபயோகமாய் இருந்து.
அந்த வாகனங்களினால் நமக்கு நன்மை ஏற்படுவதற்கு வாகனம் வைத்திருக்கும் நபரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு ஏற்றாற்போல் அந்த வாகனத்தின் மொத்த கூட்டு எண் அமையவேண்டும்.
அப்படி அந்த நபரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு அவருக்கு அமைந்திருக்கும் வாகனத்தின் கூட்டு எண் விரோதமாக அமைத்திருக்குமானால்.
அந்த வாகனத்தினால் அவருக்கு நஷ்டம் என்று சொல்ல கூடிய வாகன விபத்து வாகனத்துக்கு அடக்கடி செலவு செய்தல் வாகனத்தை விற்கும் சூழ்நிலை என்றுஅந்த வாகனத்தினால் நன்மையை அனுபவிக்க முடியாத சூழ் நிலைகள் போன்றவை ஏற்படலாம்.
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு வண்டி வாகன யோகம் சிறப்பாக அமைய வேண்டுமானால் அவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கு அதிபதியும் வண்டி வாகனக்காரன் என்று சொல்ல கூடிய சுகரனும் சிறப்பான இடத்தில அமைந்திருக்கும் பொழுது அவருக்கு வண்டி வாகன யோகம் சிறப்பான பலனை தரும்.
ஜோதிட சாஸ்திரத்தில் வண்டி வாகனங்களை குறிக்கும் கிரகமாக சுக்ரன் திகழ்கிறார். நியூமராலஜி படி வண்டி வாகனம் என்ற சொல்லை குறிக்க கூடிய ஆங்கில சொல்லான MOTOR(4 7 4 7 2 ) என்ற ஆங்கில சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 24 = 6 என்றும் CAR (3 1 2 ) என்ற ஆங்கில சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை6என்று சுகரனின் ஆதிக்க எண்ணில் வருவது விந்தையான ஆச்சர்யமான விஷயமாகும்.
வண்டி வாகனங்களுக்கு ஏற்ற ராசியான எண் 6 எண் என்பது புலப்படுகிறது . அதேபோல் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணும் வண்டி வாகனங்களுக்கு ஏற்ற எண்.
நில்லாமல் ஓடிகொண்டிருக்கும் ஒரு சாதனம் தான் வாகனங்கள்.
ஓடு ஓடிகொண்டிரு ஓடுதல் போன்ற தமிழ் சொல்லின் ஆங்கில வார்த்தையான RUNஎன்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை (2 6 5 = 13 = 4 ) என்றராகுவின் ஆதிக்க எண்ணில் வருவதால் தான் இந்த ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண் வண்டி வாகனங்களுக்கு ஏற்ற மற்றொரு எண்ணாகவும் இருக்க வேண்டும் .
வண்டி வாகனங்களுக்கு 6, 4 ம் எண் அதிர்ஷ்ட மானது என்று சொல்லி இருந்தாலும் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்3 க வருபவர்களுக்கு வாகனத்தின் எண் 6 அமைத்துவிட்டால் அந்த வாகனத்தினால் அவருக்கு பெருத்த சேதம் ஏற்படும் என்பது நியூமராலஜி கூற்று.
அதேபோல் 2 ம் எண்ணை பிறந்த தேதியில் கொண்டவர்களுக்கு வாகன எண் 9 கவருவதும் 5ம் கொண்டவர்களுக்கு 6 ம் எண்ணும் 7 ம் கொண்டவர்களுக்கு 2 ம எண்ணும் 8 ம் எண் கொண்டவர்களுக்கு 1, 9 ம் எண்ணும் வாகன எண்ணாக அமைந்தால் தீமையான பலன்களை கொடுக்கும்.
அதேபோல் ஒவ்வொருவருக்கும் அமையும் வாகனத்தின் கூட்டு எண் அவரின் பிறந்த தேதிக்கு சாதகமானதாக இருந்தால் மட்டுமே அந்த வாகனத்தினால் அவருக்கு நன்மை உண்டு .
மேலும் எந்த தேதியில் பிறந்து இருந்தாலும் வாகனத்தின் கூட்டு எண் 18,29 இந்த எண்களில் வந்தால் அந்த வாகனத்தால் அவருக்கு அவ்வளவு நன்மை ஏற்பட வாய்ப்பில்லை.