கண் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு: IIRSI 2022 தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை 10 ஜூலை 2022 கண் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு: IIRSI 2022 தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார் !!
- இரண்டு நாட்கள் நிகழ்வாக வருடாந்திரமாக நடைபெறும் இக்கருத்தரங்கின் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுமார் 2000 பங்கேற்பாளர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நவீன அறுவைசிகிச்சை உத்திகள் மற்றும் சிறந்த சிகிச்சை நடைமுறைகள் மீது நேரடி அனுபவ பயிற்சியினை இதில் நடைபெறும் நேரலை அறுவைசிகிச்சை நிகழ்வுகளும் மற்றும் வெட் லேப் அமர்வுகளும் வழங்கும்.
சென்னை, ஜுலை 9, 2022: தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், IIRSI 2022 நிகழ்வை தொடங்கி வைத்தார். கண்ணுக்குள் உட்பதியம் மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சை 37-வது கருத்தரங்கான இது, முன் தடுக்கக்கூடிய பார்வைத்திறன் இழப்பிற்கு சிகிச்சையளிப்பது, கண்ணுக்குள் லென்ஸ்கள் உட்பதியம் (IOL) மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவை சிகிச்சை ஆகிய அம்சங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற இந்தியாவின் மிகப்பெரிய செயல்தளமாகவும் இருக்கிறது. இந்தியாவிலுள்ள கண் மருத்துவவியலாளர்களின் சங்கமான IIRSI – ன் இந்த இருநாள் வருடாந்திர கருத்தரங்கு, நாடெங்கிலுமிருந்து 2500-க்கும் அதிகமான கண் மருத்துவவியல் நிபுணர்களையும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 200-க்கும் கூடுதலான பங்கேற்பாளர்கள் மற்றும் சிறப்புரை நிகழ்த்தும் நிபுணர்களையும் பங்கேற்குமாறு ஈர்த்திருக்கிறது.
பத்மஸ்ரீ பேராசிரியர். டாக்டர். மஹிபால் S. சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் (AIOS) அறிவியல் குழு தலைவர் டாக்டர். லலித் வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை பேராசிரியர் டாக்டர். நம்ரதா ஷர்மா, IIRSI – ன் தலைவர் டாக்டர். ராகினி பரேக் மற்றும் IIRSI – ன் தலைமை செயலாளர் புரொஃபசர் அமர் அகர்வால் ஆகியோர் இக்கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்துகொண்ட முக்கிய ஆளுமைகளுள் சிலர்.
“கண் புரை மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சையில் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை” என்ற தலைப்பு மீதும், கண் மருத்துவவியலில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள், கண் அறுவைசிகிச்சை, Yo – கண்மருத்துவவியல் ஆகியவை மீதும் அமர்வுகள் இக்கருத்தரங்கில் நடைபெறுகின்றன. டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள் நேரலையாக பங்கேற்பாளர்கள் காண்பதற்காக ஒளிபரப்பு செய்யப்படும். கண்ணின் முன்புற பகுதி மற்றும் சவால்மிக்க அறுவைசிகிச்சை நேர்வுகள் ஆகிய தலைப்புகள் மீதும் விவாதங்களும், கலந்துரையாடல்களும் நடைபெற உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியன் சொசைட்டி ஆஃப் கார்னியா மற்றும் கெராட்டோ ரிஃப்ராக்டிவ் சர்ஜன்ஸ் ஆகியவற்றின் ஒரு சிறப்பு அமைவும் இந்நிகழ்வின்போது இடம்பெறுகின்றன.
வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல கல்வியாளர்களின் பேருரைகள், இளம் கண் மருத்துவ நிபுணர்களுக்கான அமர்வுகள், வேட் லேப் மீது நேரடி அனுபவ பயிற்சிகள், கண் மருத்துவம் சார்ந்த ப்ரீமியர் லீக் போட்டி, கண் மருத்துவவியலில் விசாரணை அமர்வு, IIRSI திரைப்பட திருவிழா விருது நிகழ்ச்சி, IFFA மற்றும் IIRSI நிழற்படக்கலைப் போட்டி, ஆகியவையும் இம்மாநட்டின்போது நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் IIRSI 2022-ன் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும்.
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், இந்நிகழ்வை தொடங்கிவைத்து உரையாற்றுகையில், “இந்தியாவில் கண் கோளாறுகளும், பாதிப்புகளும் மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின்படி நம் நாட்டில் 12 பில்லியன் பார்வைத்திறனற்ற நபர்கள் இருப்பதாகவும் மற்றும் இவர்களுக்கும் கூடுதலாக 450 மில்லியன் நபர்களுக்கு பார்வை குறைபாடுகளை சரிசெய்யும் நிகழ்ச்சி தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு மில்லியன் மக்கள்தொகையில் பார்வைத்திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக்குரியது. எனினும், ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படுமானால், பெரும்பாலான கண் பிரச்சனைகள் மற்றும் பார்வை திறனிழப்புகள் வராமல் தடுக்க இயலும். அறிவியல் முன்னேற்றங்களின் பலன்கள் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய உதவுவதற்கு கண் பராமரிப்பிற்கான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்க தற்போதைய அளவைவிட பன்மடங்கு முதலீடு செய்வது அவசியமாகும்,” என்று கூறினார்.
“தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு மாநிலம் கண் மருத்துவவியல் உட்பட, உடல்நல பராமரிப்பிற்கான சிறப்புப் பிரிவுகளில் எப்போதும் முதன்மை வகித்து வருகிறது. கண் மருத்துவத்துறையில் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்த அறிவோடு மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றுகின்ற மருத்துவர்களை உருவாக்குகின்ற முதன்மையான கண் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் இம்மாநிலத்தில் பல இருக்கின்றன. இந்திய கண் அறுவைசிகிச்சை மருத்துவர்களின் திறன்களை இன்னும் மேம்படுத்துவதில் IIRSI போன்ற கருத்தரங்குகள் ஒரு முக்கியப்பங்கை ஆற்றிவருகின்றன. இந்த மாநாடு அமைத்து தரும் தளம் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளவும் மற்றும் அதன்மூலம் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும் ஏதுவாக்குகிறது. பார்வைத்திறனை திரும்பவும் வழங்குவதில் நவீன வழிமுறைகளை உருவாக்குவதிலும் மற்றும் நாட்பட்ட தீவிர கண் சிக்கல்களின் மேலாண்மையிலும் இக்கருத்தரங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்,” என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் மேலும் குறிப்பிட்டார்.
IIRSI – ன் தலைமை செயலரும் மற்றும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால் ஆற்றிய உரையில், “IIRSI – ன் வருடாந்திர கருத்தரங்கு, கண் மருத்துவவியலில் உலகளாவிய புத்தாக்கங்களை மையமாகக் கொண்டு நடைபெறுகின்ற ஒரு மிக முக்கிய நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் கன் மருத்துவவியல் காலண்டரில், எண்ணற்றோர் விரும்பிப் பங்கேற்கும் மற்றும் கண் மருத்துவவியலாளர்கள் தவறவிடக்கூடாத நிகழ்ச்சியாகவும் இது இருக்கிறது. கண்புரை பாதிப்பில் சிக்கலான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகளையும் மற்றும் மருத்துவர்களுக்கிடையே நிகழ்கின்ற கலந்துரையாடல்கள் வழியாக, அறுவைசிகிச்சை உத்திகளையும் அறிந்துகொள்ள வளர்ந்து வரும் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு ஒரு நல்ல தளத்தினை இக்கருத்தரங்கு வழங்கும். இந்தியாவில் நோயறிதல் செயல்பாடு மற்றும் சிகிச்சையில் கண் மருத்துவர்களின் திறன்களையும் சிறப்பான சிகிச்சை உத்திகளையும் கணிசமாக உயர்த்துவதில் IIRSI கருத்தரங்குகள் மிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
மிகப்பொதுவான கண் அறுவைசிகிச்சைகளுள் ஒன்றாக இருக்கிற கண்ணுக்குள் வைக்கும் லென்ஸ்கள் பதியம் மற்றும் கண்ணின் ஒரு பகுதியான விழித்திரையிலிருந்து வரையறுக்கப்பட்ட அளவிலான திசுவை அகற்ற லேசர் உதவியோடு செய்யப்படும் லாசிக் (LASIK) அறுவைசிகிச்சை ஆகியவற்றில் கடந்த பல ஆண்டுகளில் பல நவீன முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்ற என்று புரொஃபசர் அமர் அகர்வால் மேலும் கூறினார். “இவைகள் தொடர்பான அமர்வுகளை இன்டராக்டிவ் முறை சார்ந்தாக ஆக்கியிருப்பதன் மூலம் இவற்றை நாங்கள் அதிக ஆர்வமும், சுவாரஸ்யமும் உள்ளதாக செய்திருக்கிறோம். ஆப்தாலமிக் ப்ரீமியர் லீக் கோர்ட் மார்ஷியல் போன்ற நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களின் ஈடுபாட்டுடன் ஆர்வமூட்டும் வகையில் அறிவுப்பகிர்வை செய்வதற்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. நேரலையாக ஒளிபரப்பப்படும் அறுவைசிகிச்சை நிகழ்ச்சிகள், இக்கருத்தரங்கின் ஆர்வமூட்டும் அம்சங்களாக இருக்கின்றன; அனுபவம் மிக்க அறுவைசிகிச்சை மருத்துவர்களின் அறுவைசிகிச்சை உத்திகள் மற்றும் சிறந்த சாதனங்களின் பயன்பாட்டை புரிந்துகொள்ள பங்கேற்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பையும் இவை வழங்குகின்றன. புதுமையான அறுவைசிகிச்சை உத்திகள் மீது அவர்களுக்கு நேரடி பயிற்சி அனுபவத்தை வெட்லேப் அமர்வுகள் வழங்குகின்றன. புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச கண் மருத்துவ நிபுணர்களோடு நடைபெறும் இந்த இன்டராக்டிவ் அமர்வுகளிலிருந்து இதில் பங்கேற்கும் அனைத்து மருத்துவர்களும் பலனடைவார்கள் என்று நான் உறுதியாக கருதுகிறேன்,” என்று டாக்டர். அமர் அகர்வால் மேலும் விளக்கமளித்தார்.
இந்தியாவிலிருந்து. டாக்டர். ஜீவன் டிட்டியால் மற்றும் டாக்டர். ஹிமான்சு மேத்தா ஆகியோர் ஜே. அகர்வால் குளோபல் ஐகான் கோல்டு மெடலை பெறும்போது டாக்டர். தலித் சிங் கோல்டு மெடலைப் பெறுகிறார். டாக்டர். நமர்தா ஷர்மாவுக்கு, டாக்டர். திருமதி. டி. அகர்வால் கோல்டு மெடலும் மற்றும் டாக்டர். கமல்ஜீத் சிங்கிற்கு ஓம் பர்காஷ் கோல்டு மெடலும் வழங்கப்படுகின்றன. சுபோத் அகர்வால் கோல்டு மெடலை டாக்டர். மோகன்ராஜன் பெறுகிறார். டாக்டர். அருண் ஷேட்ரபால், டாக்டர். ஆஷியானா நாராயணி, டாக்டர். மொஹாக் ஷா, டாக்டர். சமர் பசாக், , டாக்டர். சௌரப் லுத்ரா, டாக்டர். ஷீத்தல் பிரார் மற்றும் டாக்டர். கே. ஷ்ரீஷ் குமார் ஆகியோர் விருதுகளால் கௌரவிக்கப்படும் இந்திய நிபுணர்களாவார்.
டாக்டர் அடி அபுலாஃபியா, ஜெருசலேம்; டாக்டர். அஹமது அஸ்ஸாஃப், எகிப்து; யுஎஸ்ஏ – ஐ சேர்ந்த டாக்டர். கேத்தலீன் மெக்காப், டாக்டர். சிந்தியா மட்டோசியான், டாக்டர். பி டீ ஜி ஸ்டீஃபன்சன், டாக்டர். ஜேக் பார்க்கர், டாக்டர். ரிச்சர்டு டேவிட்சன்; டாக்டர். லாமிஸ் பேடூன், நெதர்லாந்து, டாக்டர். செர்ஜியோ கனபோவா, பிரேசில் மற்றும் டாக்டர். ஷீராஸ் தயா, யுகே ஆகியோர் இந்நிகழ்வில் விருதுகள் பெறும் சர்வதேச கண் மருத்துவ நிபுணர்களாவர்.