சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர் (CSR) மாநாடு WEMAAA-2022!!

சென்னை 13 ஜூலை 2022 சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர் (CSR) மாநாடு WEMAAA-2022!!

உலகத் தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் சி.எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022 ஆகும்.

இது முக்கியமாக 12000 ஆண்டுகளுக்கு முன் லெமோரியா கண்டத்தின் பழைமை வாய்ந்த சூத்திரங்களை உள்ளடக்கிய அகத்தியர் மாமுனி வரின் அகத்தியம் என்ற நூலின் தற்சார்பு, தேனீக்கள் , மற்றும் வண்ணத்து பூச்சிகளின் பொருளாதாரத்தை கடைப் பிடித்து இயற்கையுடன் ஒத்து வாழ்தல் அத்துடன் விஞ்ஞான ரீதியான வளர்ச்சி, எந்திரமையம், நவீனமையமாக்குதல் போன்ற தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளினால் மக்கள் நலனில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமலும், இயற்கைக்கு / சுற்றுப்புற சூழல், விவசாயத்திற்கு, மக்கள் நலனிலும் ஆரோக்கியத்திற்கு எந்த கேடுகளும் வராமல் செயல் பட அருளிய சூத்திரங்களை மறு பரிசீலனை செய்து அதை நடை முறைப்படுத்த வைக்கும் கருத்தரங்கம்.

இவைகளை தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் விவசாய பெருங்குடி மக்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு பொதுமக்களுக்கு, அரசாங்க, தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இளம் தலை முறையினருக்கு விளக்கம் கொடுத்து அடுத்த 20 ஆண்டுகளில் பாரததேசத்தில் அனைவரும் ஒரு ங்கிணைந்து செயல் படுத்த வேண்டிய பல்வேறு வகையான திட்டங்களை நிர்ணயம் செய்யும் மாநாடு.

இதன் மூலம் அடுத்த 1000 ஆண்டுகள் நம் எதிர்கால சந்ததியினர் மகிழ்வுடனும், நோய் நொடி இல்லாமலும், நஞ்சில்லா உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், வளம் குன்றா கிராமப்புற ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சியை மையப் படுத்தியும், மீண்டும் பண்டமாற்று முறையின் அவசியத்தை உணர்த்தவும், தற்சார்பு சர்குலர் பொருளாதாரத்தை நிலை நிறுத்த, கிராமப்புற பகுதிகளில் மீண்டும் ஒற்றுமையை கொண்டு வர ஒரு மிகப்பெரிய சக்தியாக நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விழாவாக இந்த WEMAAA- 2022 விழா அமையும்.

அது மட்டுமல்லாது பாதுகாப்பான உலக நலனில் நல்ல பலன் தரும் மாற்றத்திற்கு விவசாயிகளை, பெண்களை, கல்வியாளர்களை, மக்கள் நலனில் அக்கறை கொண்ட விஞ்ஞானிகளை, நல்ல அரசியல்வாதிகளை, ஞானம் பெற்ற பொது மக்களை, வீரியமுள்ள இளைய சமுதாயத்தை , நுகர்வோர்களை, பன்னாட்டு நிறுவனங்களை, தன்னார்வு தொண்டு நிறுவனங்களை, இளம் விஞ்ஞானி களை வரவேற்கும் மாநாடு.

இதை சங்கமாஸ் இன்டர் நேஷனல் (SANGAMAAS INTERNATIONAL) மற்றும் இந்திய இயற்கை விவசாயிகள் சங்கமும் ( IOFA) இணைந்து நடத்துகிறது. அத்துடன் இவர்களுக்கு SEEPF, SCSF நிறுவனங்களும் உதவி கரம் நீட்டியுள்ளது. இந்த மாநாட்டை பொறுப்புணர்வுடன் சிறப்பாக நடத்திட திரு சுனீஸ் எஸ். தேவன் (SUNEESH S.DEVAN) மற்றும் டாக்டர் சுப்பிரமணியன் முருகேசன் (Dr.SUBRAMANIYA MURUGESAN) சிறந்த ஏற்பாடுகளை அவர்கள் சகநண்பர்கள் உதவி மூலம் செய்து உள்ளார்கள்.

சங்கமா இன்டர் நேஷனல் என்பது சர்வதேச அளவிலான தன்னார்வு தொண்டு நிறுவனம். ஐயோபா (IOFA)என்பது இயற்கை விவசாயிகளை இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து செயல் படுத்திக் கொண்டு இருக்கும் விவசாயிகளின் நலனிலும் நுகர்வோர்கள் நலனிலும் அக்கறை கொண்ட நிறுவனம். இந்த சி.எஸ்.ஆர் வெண 2022 மாநாடு (CORPORATE SOCIAL RESPONSIBILITY) இந்திய நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதமாக முதன் முறையாக சென்னையில் ஜீலை மாதம் பத்தொன்பது தேதி 2022 ம் ஆண்டு ( 19-7- 2022) சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் (KALAIVANAR ARANGAM ,TRIPLICANE)மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறவிருக்கிறது. இதில் 350 பண்ணாட்டு நிறுவனங்கள், 350 தன்னார்வுத்தொண்டு நிறுவனங்கள், 100 க்கு மேற்பட்ட முன்னோடி விவசாயிகள், 100 க்கு மேற்பட்ட தரமான அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போது 10 முதல் 12 தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு ஃப்ரபஞ்ச வனத்திட்டம் மற்றும் வேளாண் மருத்துவ மனைக்கு நிதி வழங்கப்படுகிறது.

Read Also  ரெயில்வேயில் பணிபுரியும் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துகிறது மத்திய அரசு.!!

அகத்தியர் சூத்திரம் பிரகாரம் மக்கள் மற்றும் ஒரு நாடு செழிப்புடன் இருக்க மிக முக்கியமான முக்கோணம் ஒருங்கிணைந்த விவசாயம், ஒருங்கிணைந்த மருத்துவம் , ஆரோக்கியம் பேணுதல், சுற்றுப்புற சூழல் பேணி காத்தல் , இது அறம் சார்ந்த ஆட்சியை நடத்தும் மன்னர்களுக்கு அவசியம். இந்த விசயங்கள் கடந்த 260 ஆண்டுகள் வழி மாறியது, நெறிமுறை தவறியது தற்போது மனித இனம் வாழ்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அது மட்டுமல்ல அடுத்த 20 ஆண்டுகள் சவால் மிக்க சகாப்தமாக இருக்கும் என மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும், விஞ்ஞானிகளும், ஞானிகளும் துல்லியமாக கணித்துள்ளார்கள்.இதை சரி செய்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், விவசாயிகள், நுகர்வோர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், இளைய சமுதாயம் ஒன்று சேர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பான முறையில் நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ள திட்டங்களை வடிவைமைத்து செயல்படுத்திடும் தருணத்தில் இருக்கிறோம். அதன் படி கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு பகிர்வு நிதியுதவி மூலம் உலகில் ஏற்படும் புவியியல் மாற்றங்கள், பஞ்சபூத சீற்றங்கள், வளம் குன்றா வேளாண்மையின் மூலம் நஞ்சில்லா உணவு கிடைத்திட, சுற்றுப்புற சூழலை காத்திட, பொது சொத்துக்களை பேணிக்காக்க, நோய் நொடியில் லா ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க, சிறந்த தொழில் நுட்பங்கள், எந்திரமையம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு அழைப்பு விடுப்பது மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமான 12 துறைகளுக்கும் நிதி உதவி அளிப்பது போன்றவை இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக இடம் பெறுகிறது.

விவசாயம், சுற்றுப்புற சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து சி.எஸ்.ஆர் திட்டம் எனப்படும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக முன்னெடுக்க இந்த மாநாடு வழி வகை செய்யும். இந்த வெமா 2022 மாநாட்டிற்கு விளம்பரதாரர்கள், வியாபாரிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநாட்டில் ஐந்து விசயங்களை உள்ளடக்கி விளக்க உரை அளிக்கப்படும்.

Read Also  உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை உற்பத்தியாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.!!

1. Triangle of success

2. Triangle of continued services

3. Triangle of self sustained village economy

4. Triangle of Ancient value systems

5. Triangle of carbon sequestration and corporate social responsibility including carbon trading and corporate responsibility.

இத்துடன் கடந்த 5000 ஆண்டுகளில் இருந்து வந்த இந்தியாவின் பாரம்பரியங்கள், எப்படி அழிந்தது, அதன் அழிவுப் பாதைகள், எப்படி மீட்டு எடுக்க வேண்டும், கால்நடைகளை அழித்த வரலாறு, பயனற்ற கல்வியறிவு ( மெக்காலே ) என்பதை இந்த மாநாடு வழியுறுத்தப்படும்

உலகின் தலைசிறந்த பொருளாதாரம் இந்திய என்ற கருத்துக்கள் ஆதாரங்களுடன் சிறப்பு மிக்க குறிப்புகள் பகிரப்படும்.

5000 ஆண்டுகளில் இருந்து பின் நம் மக்கள், ஆட்சியாளர்கள் வழி மாறிப் போய் நம் தேசத்தின் சீர்கேடுகளைப்பற்றியும் அதை சரி செய்யும் வழிமுறைகளும் இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இத்துடன் நல்ல சிந்தனைகளை பெரிய அளவில் செயல் படுத்த ( Great Ideas must become transforming movement), வயதானவர்களின் அல்லது பெரியவர்களின் அனுபவம் இளைய சமுதாயத்தின் அறிவு, உடல் உழைப்பை ஒருங்கிணைக்கும் வழி முறைகளை முன்னெடுத்து அதிலும் முக்கியமாக 90 சதவீதம் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் விவசாயத் துறை, மருத்துவத் துறை (ஆரோக்கியம்), மற்றும் சுற்றுப்புறச்சூழல் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு இந்த மாநாட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரசாயன உரங்களின் தீமைகள், பல்லூயுர் பெருக்க சீர் கேடுகள், மண்கரிமம் ( soil carbon and soil organic matter, micro Organisms), நன்மை பயக்கும் உயிர் உரங்கள், விவசாய இடுபொருட்களின் முக்கிய அம்சங்களான விதைகள், விளைச்சலுக்கு பிந்தைய சேதாரங்களை தடுக்கும் வழிமுறைகள், விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்தல் போன்ற விசயங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.

இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்திருக்கும் சங்கமாஸ் இன்டர்நேஷனல் தன்னார்வ தொண்டு நிறுவனம், மற்றும் இந்தியன் ஆர்கானிக் ஃபார்ம்ஸ் அசோசியேஷன் (IOFA) இந்தியாவில் மருத்துவ உட்கட்டமைப்பு துறை, விளையாட்டு துறை, பெண்கள் திறன் மேம்பாட்டு துறை, நகர் புற மற்றும் ஊரக மின்னணு தொழில்நுட்ப பகிர்வு துறை, விலங்குகள் நலம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்டல், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான திட்டம், புதிய வேளாண்மை பயிற்சியில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு, கல்வி கற்பித்தல் துறையில் மேம்பாடு, கல்வித்துறை… உள்ளிட்ட பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட துறைகளில் 12 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த நிறுவனம் என்பதால், இவர்கள் ஒருங்கிணைக்கும் மாநாட்டில் சர்வதேச நாடுகளிலிருந்து ஏராளமான தனிநபர் திறமைசாலிகள், விஞ்ஞானிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவை கலந்து கொள்ள விருப்பமும், சம்மதமும் தெரிவித்திருக்கின்றன.

வணிகம், செயல்திட்டம், பலன்கள் இவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைப்பதுடன், உலகம் முழுவதிலும் தலைமை பண்பும், ஆளுமைத் திறனும் கூடியவர்களுடன் இணைந்து செயல்படுவதும், அவர்களின் அறிவு, அனுபவம், திறன் ஆகியவற்றை தொழில் முறையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதிய வடிவிலான புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, தொடர்பு ஆகியவற்றுடன் இயங்குவதே எங்களின் நோக்கம்.

Read Also  நெல்லை, மேலப்பாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற இருசக்க வாகன விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்!

இந்த நிகழ்வில் 45 இலட்சம் ரூபாய் மதிப்புடைய திட்டம் மற்றும் நான்கு கோடி ரூபாய் மதிப்புடைய திட்டம் என இரண்டு வகையான திட்ட மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில் கலந்து கொள்பவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் திட்டத்தை செயல்படுத்தும் போது சங்கமாஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஐரோப்பாவும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவியை வழங்குகிறது. இதற்கு சங்கமா இன்டர் நேஷனல் சி.எஸ்.ஆர் தகுதி உடைய நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவியை பெற்று தருகிறது, இதற்கு ஐயோபா சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களையும், விவசாயிகளையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைந்த செயல் பட வைக்கிறது.

இந்த மாநாட்டில் தங்களுடைய நிறுவனத்தின் முத்திரையை இடம்பெற விரும்புபவர்கள், இளம் விஞ்ஞானிகளுடன் நேரடியான கலந்துரையாடல், ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட சாதனை பட்டியல் அல்லது சேவைகளின் பட்டியல்.. வருகை தரும் பார்வையாளர்கள் பார்வையிடும் வகையில் இடம்பெறும். மேலும் இந்த மாநாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் அவசியத்தை யூட்யூப், ஃபேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டாகிராம்.. உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், பதாகை, மின் பதாகை, காணொளி போன்றவற்றின் மூலமாகவும், சென்னை நகரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.sangamaasfoundation.com/ இந்த இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.

குறிப்பு: இந்த சர்வதேச அளவிலான எதிர் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள தனி நபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் சங்கமாஸ் இன்டர்நேஷனல் அறிவித்திருக்கும் புதிய கண்டுபிடிப்பு திட்டங்களில் கலந்துகொள்ள விருப்ப விருப்பம் தெரிவிக்கும் தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த இணையத்தள முகவரியை கிளிக் செய்யவும்.

இறுதியில் இந்த உலகத்தில் இது வரைக்கும் நடக்காத விசயங்களை நடக்கவைக்கும் ஒரே சூத்திரம் 12000ஆண்டுகளுக்கு முன்பு நாகவம்சத்தின் வழி வந்த ( சிவவம்சம்) அகத்தியர் மாமுனி வரின் வழியே என்பதை இந்த மாநாடு நிரூபித்து, இதை உலக அளவில் செயல் படுத்த வழி வகை செய்யும். அதோடு 18000 அகத்தியர் ஸ்லோகங்களை மீண்டும் கண்டுபிடித்து, முக்கியமான 12 துறையில் ஆராய்ச்சிகள் செய்து அது மக்கள் நலனை பேனிகாக்கவும், ஆனந்தமாக வாழ்க்கைமுறையைக் மீண்டும் கொண்டு வர செயல் திட்டங்கள் உருவாக்க, நடைமுறைப்படுத்தவும் வழி வகுக்கும்.

இப்படிக்கு

டாக்டர் சுப்பிரமணியன் முருகேசன் மற்றும் சுனீஸ் எஸ் தேவன்

9444781692

93614 70343

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *