16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை நான்கு மருத்துவமனைகளை மூட மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு!
சென்னை 18 ஜூலை 2022 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை நான்கு மருத்துவமனைகளை மூட மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு!
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம், சினைமுட்டை எடுத்த நான்கு மருத்துவமனைகளும் மூடப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக பாதகங்களை விளக்கவில்லை அதிர்ச்சியாக இருக்கிறது.
ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.
சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது.
விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை.
அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நான்கு மருத்துவமனைகளையும் மூட உத்தரவு.
நான்கு மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சினைமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, தரகர் மற்றும் ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றித்தந்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.