வனவிலங்குகள் இடம இருந்து மக்களின் உயிர் காக்கப்படுமா!

சென்னை 11 ஆகஸ்ட் 2022 வனவிலங்குகள் இடம இருந்து மக்களின் உயிர் காக்கப்படுமா!

மேட்டுப்பாளையம் பகுதி நீலகிரி மலைப்பகுதியின் தொடர்புக்குட்ப்பட்ட பகுதியாகும். இங்கு வனப்பகுதி அதிகமாக இருப்பதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படக் கூடிய இடமாக தான் உள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதி. அதிலும் மிக முக்கியமாக கோத்தகிரி சாலைப் பகுதியை ஓட்டியுள்ள அடர்ந்த காட்டு பகுதிகளுக்குள் இருந்து மாலை நேரம் வன விலங்குகள் வெளியே வருவதும் போவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்த வன விலங்குகளை பார்க்க அடிக்கடி பொதுமக்கள் கோத்தகிரி சாலைக்கு செல்வதும் வாடிக்கையே. இந்த வன விலங்குகளில் மிக முக்கியமாக காட்டு யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைப் புலிகள் என ஆபத்தான விலங்கினங்கள் அடிக்கடி கோத்தகிரி சாலை வனப்பகுதியில் இருந்து ஊட்டி சாலை வனப்பகுதி வழியே காட்டுக்குள் செல்வது வழக்கம்.

இதில் சில காலமாக ஓற்றை ஆண் யானை ஒன்று திடீர் திடீரென வெளியே வருவதால் அப்பகுதி மக்களின் ஆபத்தை உணர்ந்த வனத்துறையினர் வால்ப்பாறை டாப்சிலிப் பகுதியிலிருந்து கும்கி யானைகளை வரவழைத்து கொம்பனை பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்ப முயற்சி செய்தும் பலனின்றி போனது.

இப்படி இருக்கையில் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சில ஊராட்சி பகுதிகளை அடர்ந்த காடுகள் பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஊட்டி மெயின் ரோட்டில் அ. கா விற்கு உட்ப்பட்ட பகுதிகளில் சொகுசு லாட்ஜ்கள், வணிக வளாகங்கள், உயர்தர ஹோட்டல்கள் என எப்போதும் கோலாகலமாக இருக்கக் கூடிய பகுதியாக ஊட்டி மெயின்ரோடு விளங்கி வருவதால் வன விலங்குகள் செல்லும் வழி தெரியாமல் ஊருக்குள் குடியிருப்பு வாசிகள் பகுதிகளில் புகுந்து விடுவதால் அடிக்கடி பரபரப்பு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.

Read Also  ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் அடுத்தடுத்து மோதி கோர விபத்து 233 பேர் பலி 900 பேர் காயம்- விபத்து நடந்தது எப்படி?

ஏழை நடுத்தர மக்கள் வீடுகட்ட அனுமதியில்லாத பகுதிகளில் உயர்தர மாடல் கட்டிடங்கள் கட்ட எப்படி அனுமதி கிடைத்தது என விசாரித்த போது சென்னையில் அனுமதி பெற்றதாக உரிமையாளர்கள் கூறி வருவதாக சம்பந்தப்பட்ட துறை சார் தலைவரின் பதில். ஏழை நடுத்தர மக்கள் அ.கா விற்குட்ப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கோ, வீட்டு மனை வாங்குவதற்கோ வழியில்லாத நிலையில் உயர்தர கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி என்பது கேள்வியே? அ.கா ஏழை நடுத்தர மக்களுக்கு மட்டுமா என்பதே கேள்விக் குறி ?

மேலும் அ.கா என்பது மத்திய.மாநில அரசுகளின் சட்டமா அல்லது அந்தந்த மாவட்டம் அல்லது ஊராட்சி ஒன்றியங்களின் சட்டமா? என்பதே கேள்க்குறியாக உள்ளது .

ஏனென்றால் மாவட்டம் வரையில் கட்டிட அனுமதி இல்லாத போது மாநிலத்தில் மட்டும் எப்படி பெற முடியும்?

பணம் பத்தும் செய்யும் என்கிற பழமொழிக்கேற்ப்ப நடை முறைகள் உள்ளதால் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின்ரோட்டில் உள்ள கட்டிட அனுமதிகள் எப்படி பெறப்பட்டது , அ. கா – வில் இருக்கும் பகுதிகளில் கட்டிடம் கட்ட சென்னையில் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறதா என துறை சார் அமைச்சர் பெருமக்கள், துறை சார் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வன விலங்குகள் யாருக்கும் ஊறு விழைவிக்காமல் வனப்பகுதிக்குள் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *