மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் , சென்னை, ஓஎம்ஆர்-ல் தொடங்கும் விரிவான சிகிச்சை மையம்!!
சென்னை 17 ஆகஸ்ட் 2022 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் , சென்னை, ஓஎம்ஆர்–ல் தொடங்கும் விரிவான சிகிச்சை மையம்!!
வளர்ச்சி தாமதம், அறிவு, நடத்தையியல், உடல்சார் திறனிழப்புள்ள குழந்தைகளுக்காக இவ்வகையினத்தில் முதன் முறையாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான பராமரிப்பு
சென்னை, 2022, ஆகஸ்ட் 17: காவேரி மருத்துவமனையின் ஒரு அங்கமான ஹம்சா மூளை மற்றும் முதுகுத்தண்டு மறுவாழ்வு மையம், வளர்ச்சி சார்ந்த, அறிவு சார்ந்த, நடத்தையியல் மற்றும் உடல்சார்ந்த பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்காக இவ்வகையினத்தில் முதன்முறையாக ஒரு இடையீட்டு சிகிச்சை மையம் தொடங்கப்படுவதை அறிவிக்கிறது. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள இம்மையம் முதுகுத்தண்டு மற்றும் மூளை காயம் மற்றும் பல்வேறு மூளை நரம்பியல் பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்காக இடையீட்டு மற்றும் சிகிச்சை செயல்திட்டத்தை வழங்கும். தன்பித்தம் (ஆட்டிசம்) கவனக்குறைபாடுடன் மிகைசெயல்பாட்டு கோளாறு (ADHD), பேச்சுக்கோளாறுகள், வளர்ச்சியில் தாமதம் மற்றும் கற்றல் சிரமங்கள், டௌன் சிண்ட்ரோம், மூளைபாதிப்பு (செரிபெரல் பால்சி) ஆகிய பாதிப்பு நிலைகள் இவற்றில் உள்ளடங்கும்.
2 முதல் 9 வயதுக்கு இடைப்பட்ட பிரிவிலுள்ள இந்திய குழந்தைகளில் ஏறக்குறைய எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மூளை வளர்ச்சி சார்ந்த கோளாறு இருக்கக்கூடும் என்று 2011ஆம் ஆண்டில் செய்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பிரசவத்தின்போது வசதிகள் மற்றும் கவனிப்பு இல்லாமை, தொற்றுப்பாதிப்பு, ஊட்டச்சத்தின்மை, நகர்ப்புற பரபரப்பான வாழ்க்கைமுறையின் அழுத்தங்கள், தாமதமான கருத்தரிப்பு மற்றும் உத்வேகமளிக்காத சூழல் ஆகியவை உட்பட பல்வேறு காரணங்களினால் இத்தகைய வளர்ச்சி சார்ந்த கோளாறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட திறனிழப்புகள் மற்றும் ஊனங்கள் உள்ள குழந்தைகளுக்கு மிகச்சிறப்பான மற்றும் சிகிச்சை தேவைகள் அவசியமாக இருக்கின்றன. பல்வேறு திறனிழப்புகள் உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைநல மற்றும் மறுவாழ்வு மருத்துவர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் பணி / தொழில்முறை சிகிச்சையாளர்கள், பேச்சு மற்றும் மொழி, சிகிச்சை நிபுணர்கள், உளவியல் மருத்துவர்கள், ஆலோசகரகள், சிறப்பு கல்வியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் குழந்தைநல செவிலியர்கள் என பல்வேறு நபர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இக்குழந்தைகளின் விரிவான, சிக்கலான தேவைகளை எதிர்கொள்ள இத்தகைய சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய ஒரு சிறப்புக்குழு தேவைப்படுகிறது.
இத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். தொழில்நுட்ப மேம்பாடுகளைக் கொண்டு எங்களது சிகிச்சை அமர்வுகளை ஆர்வமுள்ளதாகவும், பயனளிப்பதாகவும் நாங்கள் ஆக்குகிறோம். மகிழ்ச்சியோடு இந்த அமர்வுகளில் அவர்கள் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். செயற்கை நுண்ணறிவு, வெர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் நகர்வினை கண்டறியும் உணர்திறன் போன்றவற்றின் அடிப்படையில் செயல்நடவடிக்கைகள், விளையாட்டுகள் சார்ந்த நவீன சாதனங்கள் மற்றும் நாங்கள் அதிகளவில் கொண்டிருக்கிறோம். இத்தகைய வழிமுறைகளின் மூலம் குழந்தைகள் சிறப்பாகவும், ஆர்வத்தோடும் செயல்நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர்; பெற்றோர்கள் மற்றும் கவனித்துக்கொள்ளும் நபர்களது பணியை இது அதிக எளிதானதாக ஆக்கிவிடுகிறது.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு நிலையை அடையாளம் காண்பது மற்றும் அதை சரிசெய்வதற்கான இடையீட்டு செயல்திட்டங்கள் மீது எமது முக்கிய கவனம் இருக்கும். இதற்காக மருத்துவமனைகள் பல்வேறு பள்ளிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து கூட்டாண்மையோடு செயல்படுகிறோம்; குழந்தைகளில் காணப்படும் இத்தகைய நிலைமைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஆரம்ப நிலையிலேயே பாதிப்புநிலையை அடையாளம் காண்பதும் மற்றும் பொருத்தமான இடையீட்டு நடவடிக்கையை மேற்கொள்வதும் மிக முக்கியம். சமீபகாலமாக குழந்தைகளில் இத்தகைய திறனிழப்புகளை அடையாளம் காணுதல் தாமதமாகவே மேற்கொள்ளப்படுகிறது. தம்பதியர் இருவரும் பணியாற்றுவதும், குழந்தைகளோடு செலவிடுவதற்கு குறைவான நேரமே இருப்பதும் இதற்கு காரணமாகும். பெற்றோர்களிடம் காணப்படும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இம்மையம் முற்படும் மற்றும் மிக ஆரம்பநிலைகளிலேயே உரிய சிகிச்சை செயல்முறைகளை தன் குழந்தைகளுக்கு வழங்க இம்மையம் உதவும்’’ என்று ஹம்சா ரீஹேப்–ன் சிறப்பு கல்வியாளரும், முதன்மை ஆலோசகருமான டாக்டர். மரிய ஃபாத்திமா ஜோஸ்பின் கூறுகிறார்.
“எதிர்காலத்திற்கான மதிப்புவாய்ந்த பொக்கிஷமாக இருப்பது குழந்தைகளே. அனைத்து குழந்தைகளுமே தனித்துவமானவை; அவர்கள் வெவ்வேறு வகை மற்றும் அளவிலான திறன்களை கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்த உதவுவதற்கு சிலருக்கு சிறப்பு கவனமும், கவனிப்பும் தேவைப்படுகிறது. சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பு சேவையை வழங்குவதற்காகவும் மற்றும் குழந்தை வளர்ப்பில் நல்ல வழிகாட்டலை வழங்குவதற்காகவும் ஹம்சா ரிஹேப் – ஐ நான் உளமார பாராட்டுகிறேன். இப்புதிய மையத்தின் வழியாக ஏராளமான குடும்பங்கள் பயன்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் இம்மையத்திலுள்ள குழுவினர் அனைவருக்கும் எனது சிறப்பான வாழ்த்துகள்” என்று குழந்தைகளுக்கான ஹம்சா ரீஹேப் மையத்தின் தொடக்கவிழா நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சியான் விக்ரம் கூறினார்.
‘‘ஹம்சா மையத்தின் மூலம் முதுகுத்தண்டு, நரம்பியல் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்கள் உள்ள வயதுவந்த நபர்களுக்கு தரமான மற்றும் முழுமையான மறுவாழ்வு சிகிச்சையினை நாங்கள் வழங்கி வந்திருக்கிறோம். ஆனால், பிரத்யேக விரிவான மறுவாழ்வு சிகிச்சை மற்றும் இடையீட்டு நடவடிக்கைகள் வழியாக சிகிச்சையளிக்கப்படக்கூடிய மற்றும் மேலாண்மை செய்யக்கூடிய ஆட்டிசம் கவனக்குறைபாட்டுடன் மிகைசெயல்பாட்டு கோளாறு (வளர்ச்சியில் தாமதம் மற்றும் கற்றல் சிரமங்கள்) போன்ற சிக்கலான பாதிப்புகள் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருவதையும் நாங்கள் கண்டு வருகிறோம். குழந்தைகளுக்குத் தோழமையான சுற்றுச்சூழல் நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பட்ட சாதனங்கள் ஆகியவற்றோடு சிகிச்சை வழங்குநர்கள், குழந்தைநல மற்றும் மறுவாழ்வு மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவையும் இப்புதிய மையம் கொண்டிருக்கிறது. இங்கு பணியாற்றும் மருத்துவர்களும், சிகிச்சை வழங்குநர்களும் நல்ல அனுபவமும், அர்ப்பணிப்பு உணர்வும், குழந்தைகள் மீது அக்கறையும் கொண்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான சிகிச்சை செயல்திட்டங்களை திட்டமிடுவதில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நெறிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்,’’ என்று சென்னை, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகிறார்.
குழந்தைகள் தான் உலகின் மிக மதிப்பு வாய்ந்த ஆதாரவளமாக இருக்கின்றனர் மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள். குழந்தைகளுக்கான ஹம்சா ரீஹேப் மையத்தில், அக்குழந்தைகளுக்கு உரிய அக்கறையையும், பொருத்தமான சிகிச்சை வழிமுறைகளை வழங்குவதுமே எமது நோக்கமாக இருக்கிறது.