இன்று அக்ஷய திருதியை ‌ என்பதால் உங்கள் வீட்டில் இதை கட்டாயம் செய்யுங்கள்.

சென்னை 20 மார்ச் 2022
இன்று அக்ஷய திருதியை ‌ என்பதால் உங்கள் வீட்டில் இதை கட்டாயம் செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இன்று வரகூடிய அக்ஷய திருதி முதலில் வீட்டில் குபேரரரையும், லட்சுமியையும் நினைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திதி வருவதால், இதை இன்னும் சிறப்பாக மாற்ற குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு மஞ்சள் தீபம் ஏற்றவேண்டும்.

அக்ஷய திருதி அன்று
பிரம்ம முகூர்த்த வேளையிலோ, முடிந்தவரை சூரியன் உதயமாவதற்கு முன்பாக அதாவது 6 மணிக்குள், வீட்டில் உள்ள நிலை வாசல் படிக்கு வெளிப்பக்கத்தில் இந்த குபேர மஞ்சள் தீபத்தை ஏற்ற வேண்டும்.

சுத்தமான சிறிய அளவில் இருக்கும் தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு, அந்தத் தட்டில் சிறிது மஞ்சள்தூளை கொட்டி, அதன் மேல் உங்கள் வீட்டில் என்ன தீபம் இருக்கிறதோ (மண் அகல் தீபமாக இருந்தால் மிகவும் நல்லது.)

அதை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.

உங்கள் வீட்டில் குபேரர் விளக்கு இருந்தால், இன்னும் சிறப்பு மிக்கதாக இருக்கும்.

அக்ஷய திருதி அன்று காலை ஏற்றப்படும் தீபத்தின் மூலம் நம் வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றும் வட மாநிலத்தவர்கள் இந்த முறையை, வருடம் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபத்திற்கு அடியில் வைத்திருக்கும் மஞ்சளை, எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து பூஜித்த பின்பு, அடுத்த நாள் காலை அந்த மஞ்சள் பிள்ளையாரை, தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுவது மிகவும் நல்லது.

Read Also  நமது குடும்பத்தில் செல்வ வளத்தை பெருக செய்யும் வழிபாடுகள்.

குறிப்பாக குல தெய்வத்தை வேண்டி கொண்டு உங்கள் வீட்டில் இந்த ஒரு முடிச்சை கட்டி வைப்பதன் மூலம், ஐஸ்வர்யம் கண்டிப்பாக பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கையாக முன்னோர்கள் இடத்தில் வழிவழியாக இருந்து வந்தது.

நமது வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான அந்த நான்கு பொருட்கள் உபயோகப்படுத்தாத சிகப்பு ரவிக்கைத்துணி உங்கள் வீட்டில் இருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் அது புது துணியாக இருக்க வேண்டும்.

அதில் சிறிதளவு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொண்டு அதில் 11 ஏலக்காய், சோம்பு 11, கிராம்பு 11 சிறிதளவு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் வைத்து, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, மொத்தமாக ஒரு பச்சைக் கலர் நூலில் கட்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் முன்பு வைத்து மனதார, குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு, பிரம்ம முகூர்த்த வெளியிலேயே உங்கள் வீட்டு பீரோவில் வைத்துவிடுங்கள்.

பிரம்ம முகூர்த்த வேளையில் நீங்கள் கட்டும் இந்த முடிச்சின் மூலம் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், குலதெய்வத்தின் ஆசீர்வாதமும் கட்டாயம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம்.

குறிப்பாக அக்ஷய திருதி அன்று இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் உங்களது குடும்பம் 16 வகையான செல்வங்களையும் பெற்று,
மிகவும் சிறப்பாக வாழ்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *