முதல் முறையாக “கா” திரைப் படத்தின் மூலம்  நடிகை ஆண்ட்ரியா ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார்.

சென்னை 18 மார்ச் 2022 முதல் முறையாக “கா” திரைப் படத்தின் மூலம் நடிகை ஆண்ட்ரியா ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார்.

மைனா சாட்டை போன்ற தரமான சமூக அக்கரையுள்ள மிக உன்னதமான திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அவர்களின் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக “கா” திரைப்படம் வெளி வருகிறது.

இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், காற்றுக்கென்ன வேலி புகழ் அக்ஷிதா, சூப்பர் டீலக்ஸ் பட புகழ் நவீன், கும்கி பட புகழ் மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார்.

கத்தால கண்ணாலே பாடல் புகழ் சுந்தர் சி பாபு இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, எலிசா படத்தொகுப்பை செய்துள்ளார்.

மேலும் சேது அவர்களின் சிறப்பு சப்தமும், தரணி அவர்களின் மிரட்டல் ஒலி கலவையும் இப்படத்தின் சிறப்பம்சமாக பேசப்படும். படம் பார்ப்பவர்களை ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும்.படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் தங்களது ஏழவது படைப்பாக ஸ்ரீகாந்த், தினேஷ் மாஸ்டர் நடிப்பில் “சம்பவம்” என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *