சிங்கப்பூருக்கு பயணிகளை வரவேற்க சென்னையில் எதிர்காலக் கனவுகள் ஓவியக் கண்காட்சி.
சென்னை 18 மார்ச் 2022 சிங்கப்பூருக்கு பயணிகளை வரவேற்க சென்னையில் எதிர்காலக் கனவுகள் ஓவியக் கண்காட்சி.
சிங்கப்பூரில் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட அனுபவங்கள் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில் சிங்கப்பூர் தனது ப்ரத்யேக பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகிறது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் அனைத்து இந்திய நகரங்களுக்கும் இடையே தனிமைப்படுத்துதல் இல்லாத, இருவழி தடுப்பூசி பயண வழித்தடத்தை (Vaccinated Travel Lane (VTL)) 16 மார்ச் 2022 முதல் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூருக்கு பயணிகள் வருகையை ஊக்குவிக்கவும், சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும், சிங்கப்பூர் பயணத்துறை கழகம் (STB), St+art India பவுண்டேஷன் உடன் இணைந்து “எதிர்காலக் கனவுகள்” என்ற தலைப்பில் ஒரு பெரிய அளவிலான வெளிப்புற ஓவிய கண்காட்சியை உருவாக்கியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் கலைஞர் டினா ஃபங் மற்றும் இந்தியப் பெண் கலைஞர் ஓஷீன் சிவா ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த கூட்டு கலாச்சார முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
கற்பனை உலகம் என்ற கருத்தாக்கத்தின் தாக்கத்தில் Dreams from the Futures/ எதிர்காலக் கனவுகள் (Ethirkaalak kanavugal) என்ற நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்பது பேரானாக்கன் கருத்துகளும், செவ்வியல் முத்திரைகளும் இணைந்த பாரம்பரிய தமிழ் மற்றும் சிங்கப்பூரின் கலாச்சார கூறுகளின் அழகியல் கலவையாகும். காஸ்மிக் சித்தரிப்புகள் தொடங்கி அனைத்தையும் உள்ளடக்குதல், சக இருப்பு, கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தொடர்பு போன்ற எதிர்கால கூறுகளுடன் அவை இணைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் புதிய, எதிர்பார்த்திராத மற்றும் புதுமையான அனுபவங்களை, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைளுடன் சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கலாம். இதனால், *SingapoReimagine* கருப்பொருளுக்கு ஏற்ப, புதிய மற்றும் ஒரு முழுமையான எதிர்காலத்தை கற்பனையுடன் உருவகப்படுத்தும் இந்த பன்முக கலாச்சார செயல்பாட்டுக்கு சென்னை பார்வையாளர்களை அழைக்கிறது. இந்த நிகழ்ச்சி சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் 3 வாரங்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட கூட்டு கலாச்சார கலைப்படைப்பு தொடரை தொடர்ந்து, STB மற்றும் St+art ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து சசூன் டொக்ஸ், மும்பை, லோதி காலனி, டெல்லி மற்றும் லிட்டில் இந்தியா, சிங்கப்பூர் போன்ற முக்கிய இடங்களில் தொடங்கியுள்ளது. உற்சாகமிகுந்த தீவான சிங்கப்பூரின் முக்கியத்துவம் வாய்ந்த ப்ராண்டாக திகழும், பேஸன் மேட் பாசிபிள் (Passion Made Possible)-ன் உணர்வுப்பூர்வமான முயற்சியால் இவை அனைத்தும் தத்ரூபமாக உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு கலாச்சாரங்களிலிருந்தும் மக்களுக்கு மிகவும் பரீட்ச்சயமான அம்சங்களை புதுமையான கற்பனைகளுடன் ஒன்றிணைக்கிறது. இதன் மூலம், இக்கண்காட்சி நமக்கு தெரிந்தவற்றை மறு கற்பனை செய்ய உதவுவதோடு, அழகியலுடன் ரசிக்கத் தூண்டுவதாக அமையும். மேலும் நமக்கு சாத்தியமான கனவுகள் மூலம் புதுமையான அனுபவத்துடன் பயணம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. பலதரப்பட்ட முக நிழற்படங்கள் கலை வேலைப்பாட்டுக்கான நுழைவாயிலாக செயல்படுகின்றன. பார்வையாளர்கள் அவற்றை ரசித்தப்படியே கடந்து செல்லும் போது, அவர்கள் சக பார்வையாளர்களுடன் மனிதர்களுக்கிடையேயான உறவை உணரும் வகையில் சந்திப்பதை.சாத்தியபப்டுத்துகிறது. பன்முக கலாச்சாரங்கள் மற்றும் மக்களை நாம் சந்திக்கும் உணர்வை உருவாக்குகிறது.
கலாப்பூர்வமான கூட்டு செயல்பாடு குறித்து, சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் இந்தியா, மத்திய, கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய இயக்குநர் திரு.ஜிபி.ஸ்ரீதர் (Mr.GB Srithar, Regional Director- India, Middle East & South Asia (IMESA), STB) கூறுகையில், “சர்வதேச பயணத்திற்காக சிங்கப்பூர் தற்போது தனது எல்லைகளை மிகுந்த எச்சரிக்கையுடனும், படிப்படியாகவும் திறந்திருக்கிறது.
இச்சூழ்நிலையில், புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடனான புதுமையான அனுபவங்கள் மற்றும் பயணிகளுக்கு செளகரியமான வகையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தரங்களுடன், இந்திய பயணிகளை வரவேற்க நாடு தயாராக உள்ளது. St+art India Foundation உடன் இணைந்து, அழகிய சென்னை நகரத்தில் எங்களது ‘Singapo Reimagine’ செயல்பாடுகள், கலை வெளிப்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான தமிழர்களின் வரலாறு மற்றும் கலாச்சார தொடர்பை கொண்டாடுவதாக அமைந்துள்ளன.
இந்த முன்னோக்கிய பயணத்தில், கலாச்சாரரீதியாக இருக்கும் பொதுவான அம்சங்களை வெளிக் கொண்டு வர நாட்டின் பிற பகுதிகளுக்கும் இப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனுபவிக்கக் கூடிய மறுவடிவமைக்கப்பட்ட அனுபவம் குறித்த ஒரு பார்வையை வழங்குகிறது” என்றார்.
St+art India Foundation -ன் கியூலியா அம்ப்ரோகி [Giulia Ambrogi, Curator, St+art India Foundation] கூறுகையில், “சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக, திறமையான கலைஞர்களின் ஒத்துழைப்பை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய கடினமான காலங்களில் இருந்து நாம் மீண்டு வர கலை மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மேலும் இந்த செயல்பாடும் நம்பிக்கையுடனும், உயிர்ப்போடு இருப்பதையும் சொல்லும் ஒரு செய்தியாக இருக்க வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டுள்ளது. எதிர்காலத்தை நாம் அனைவரும் எல்லைகளுக்கு அப்பால் ஒன்றாக இணைந்து மறுபரிசீலனை செய்ய முடியும். இந்த மாறுபட்ட பன்முக கலாச்சார செயல்பாடு ஒரு படிப்படியான மாற்றமாக செயல்படுகிறது. இது கலாச்சாரத்தை நெருங்கி பார்க்கும் ஒரு முழுமையான பார்வையாகவும் அமையும். அனைவருடைய எதிர்காலம் குறித்த ஒரு விரிவான சிந்தனையைத் தூண்டுவதாக இம்முயற்சி இருக்கும்’’ என்றார்.
ஓவிய கண்காட்சி குறித்து சிங்கப்பூர் பெண் கலைஞர் டினா ஃபங்க் கூறுகையில்,
“சிந்தனையை தூண்டும், வேடிக்கையான, முழுமையான அனுபவங்களுக்கான இணையான ஒரு சூழலை உருவாக்க விரும்பினேன். இந்த முயற்சி சமூக ஊடகத்திற்கு ஏற்றதாக இருப்பது மட்டுமல்ல, மிக முக்கியமாக கலையின் மூலமாக சொல்லும் விதம் மற்றும் அதன் மூலம் மனதில் எழும் உணர்வு இவை குறித்து ஈர்ப்பை உருவாக்கும், விழிப்புணர்வூட்டும்,” என்றார்.
இந்திய கலைஞர் ஓஷின் சிவா கூறுகையில், “இது எனது சொந்த கலை செயல்பாட்டில், ஒற்றுமை, கற்பனாலோகம், இணைப்பு மற்றும் சேர்ந்திருத்தல் ஆகியன நான் அடிக்கடி ஆராய விரும்பும் கருப்பொருள்களின் விரிவாக்கம் என்பதால், இந்த திட்டத்திற்காக வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. டினா மற்றும் அவரது ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்றுவதை நான் மிகவும் நேசித்தேன். ஏனெனில் அவை எங்கள் யோசனைகளை வண்ணமயமான, ஈடுபாடு மற்றும் இயல்பான உலகின், ஊடாட்டமாகவும், அழகாகவும் தடையின்றி கொண்டு வந்தன” என்றார்.
பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியின் மைய இயக்குநர் திரு. சபரி நாயர் (Mr. Sabari Nair, Centre Director of Phoenix Marketcity**) இந்த கூட்டு கலாச்சார செயல்பாடு குறித்து கூறுகையில், “பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி எப்போதும் அனைத்து வகையான கலைகளையும் அங்கீகரித்து பாராட்டி வருகிறது. மேலும் மக்கள் உருவாக்கும் கலையை அனுபவிக்க அதற்குரிய இடத்தை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக St+Art மற்றும் STB உடனான எங்களது ஒத்துழைப்பு, பார்வையாளர்களுக்கு ஒரு மாறுபட்ட கலையின் மூலமாக கஒப்லந்துரையாடுவதற்கும், அதனை உணர்வுப்பூர்வமாக கொண்டாடுவதற்குமான வாய்ப்பை அளிக்கிறது. இது அவர்களை புதுப்பிப்பதோடு, ஒரு சரியான கற்பனை உலகத்தை மீட்டெடுக்கும் பயணத்திற்கு அவர்களை அழைத்து செல்கிறது. இந்திய மற்றும் சிங்கப்பூர் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓவிய கண்காட்சி ஒவ்வொரு பார்வையாளருக்கும் அவர்களின் முப்பரிமாண அமைப்பின் வாயிலாக ஒரு வித்தியாசமான காட்சி அனுபவத்தை கொடுக்கும். எங்களது வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுவதற்கு நகரத்திலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஓவிய கண்காட்சியுடன், STB மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 18 மார்ச் 2022 அன்று வர்த்தக நெட்வொர்க்கிங் அமர்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், இந்திய-சிங்கப்பூர் தடுப்பூசி பயண பாதையின் (VTL) சமீபத்திய புதுப்பிப்புகளை சென்னை பயண வர்த்தகத்துடன் பகிர்ந்து கொள்ளும். இது இப்போது அனைத்து அம்சங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அதிகமான பயணிகள் இப்போது VTL வழித்தட விமானங்களை பயன்படுத்தி சிங்கப்பூருக்குச் செல்லலாம். சிங்கப்பூர் உணவுகளை கொண்டாடும் வகையில், சென்னை பார்க் ஹயாட் உணவகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிங்கப்பூர் உணவகமான திரு.ஓங் உணவகத்தில் ஒரு மாஸ்டர் வகுப்பும் நடத்தப்படும்.