நமது குடும்பத்தில் செல்வ வளத்தை பெருக செய்யும் வழிபாடுகள்.
சென்னை 10 ஏப்ரல் 2022 நமது குடும்பத்தில் செல்வ வளத்தை பெருக செய்யும் வழிபாடுகள்.
நாம் குடியிருக்கும் வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வர வேண்டும்.
முடிந்த அளவு சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்திற்கு உங்களால் முடிந்த அளவு வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.
இப்படி 12 மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் ஒரு வருடம் வரை வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் பொருளாதார உயர்வு மேம்படும்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை திருவண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருகை புரிந்து அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, கிரிவலம் செல்ல வேண்டும்.
குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்.
சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை வேளையில் சுப்ரபாதம் ஒலிக்க விடவேண்டும்.
செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு அடிக்கடி செய்ய வேண்டும்.
பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமிகளில் பைரவர் வழிபாடு மிகவும் விசேஷம் வாய்ந்தது.