யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் வருகிறது.!!

யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் வருகிறது.!!

சென்னை 30 ஜூலை 2023 யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம். அனைத்து தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வாட்ஸ்அப் சேனல்களை உருவாக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற குழுக்களுக்கு இது ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும்.

வாட்ஸ்அப் சேனலை எவ்வாறு பயன்படுத்துவது?

சமூக வலைதளங்களில் பிரபலமான டெலிகிராம் செயலியில் இந்த சேனல் வசதி பல ஆண்டுகளாக இருக்கிறது. நம்முடைய செய்திக்கதிரும் டெலிகிராமில் சேனலை வைத்துள்ளது. டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், செய்திக்கதிர் என்று தேடி இணைந்து கொள்ளலாம். அதேபோன்றுதான் வாட்ஸ்அப்பிலும் இந்த சேனல் வசதி அறிமுகமாகிறது.

வாட்ஸ்அப்பில் உள்ள சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். அங்கு அட்மின்கள், படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை நடத்தலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம். சேனலுக்கான லிங்க் அல்லது அந்த குறிப்பிட்ட சேனலை வாட்ஸ்அப்பில் தேடி சப்ஸ்கிரைப் செய்யலாம்.

இதற்காக வாட்ஸ்அப்பில் “அப்டேட்ஸ்” என்ற புதிய மெனு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் குரூப் வசதி போல், சேனல் அட்மின் அனுமதி அளித்த பின் தான் சேனலில் இணைய முடியும். தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், பயனர் மொபைல் எண்கள் யாருக்கும் காண்பிக்கப்படாது. அதே போல் PROFILE படமும் யாருக்கும்
தெரியாது.

வாட்ஸ்அப் சேனலில் பதிவிடப்படும் படங்கள், வீடியோ உள்பட அனைத்தும் 30 நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும்.

Read Also  வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலி – புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப் சேனல் அம்சம் தற்போது கொலம்பியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *