ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய காவல்துறை.
ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய காவல்துறை.
சென்னை 25 டிசம்பர் 2023 தொழிலதிபர் பறிகொடுத்த ரூபாய் 15.90 லட்சம் பணத்தை ஒரு மணி நேரத்திலேயே கண்டு பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஆட்டோவின் பின்புறம் பணப்பை இருக்கும் விஷயம் ஓட்டுநருக்கு தெரியாது என்பது போலீசார் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் பெங்களூரு தொழிலதிபர் விஸ்வநாதன் என்பவர் தவறவிட்ட ₹15.90 லட்சம் பணத்தை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த சிஎம்பிடி போலீசார்!
விஸ்வநாதன் தனது அக்கா மகனின் வெளிநாட்டு படிப்புக்காக நண்பரிடம் வாங்கிய பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது, பணத்தை ஆட்டோவின் பின்புறம் வைத்ததை மறந்து விட்டு இறங்கியுள்ளார்.
ஆட்டோவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர், CCTV உதவியுடன் ஆட்டோவை கண்டு பிடித்து பணத்தை நள்ளிரவிலேயே ஒப்படைத்த ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர்.