தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!.!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!.!
சென்னை 08 மே 2023 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அத்துமீறலை அனுமதிக்கக்கூடாது என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசே கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
நீதிமன்றங்களின் வழிகாட்டுதல் என்ற பெயரில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்த முயல்வது அதிகார அத்துமீறல்.
தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர 85% இடங்களை தமிழ்நாடு அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பும்.
நடப்பாண்டில் அனைத்து சீட்டுகளும் மத்திய அரசு மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் அலுவலகமே நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர் சேர்க்கைகள் மாநில அளவில் நடத்தப்படுவதுதான் சிக்கல் இல்லாமல் இருக்கும்.
எனவே தற்போதைய மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையே தொடருவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இன்றைய சூழலுக்கு பொருத்தமற்ற அனைத்திந்திய தொகுப்பு முறையை ரத்து செய்ய மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.