சிறுவன் ஒருவன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞனாகத் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.!!

சென்னை 04 மார்ச் 2023  சிறுவன் ஒருவன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞனாகத் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிறுவன் ஒருவன் 15 வருடங்களுக்கு பிறகு இளைஞனாகத் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.!!

உ.பி. மாநிலத்தில் உள்ள முரசோ கிராமத்தில் வசித்து வரும் ராம் சுமர் யாதவுக்கு அகேஷ் யாதவ் என்ற 10 வயது மகன் இருந்தான். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அங்கேஷை பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து, வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்ததால், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சாமியார் ஒருவரிடம் மந்திரித்து உள்ளனர்.

பின்னர், சிறுவனின் உடல் நிலை மோசமடைய மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து தங்களது கிராம வழக்கப்படி, அங்கேஷை வாழைத்தண்டுகளை வைத்து சுற்றி சரயு ஆற்றில் விட்டுவிட்டனர்.

இந்நிலையில், இறந்து போனதாகக் கருதப்பட்ட அகேஷ் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வீடு திரும்பியதை அடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“பாம்பு கடித்து என்ன ஆனது என்று தெரியவில்லை. சுய நினைவு வந்து கண்களைத் திறக்கும்போது பீகார் தலைநகர் பாட்னா அருகே அமன் மாலி என்ற பாம்பு பிடிப்பவருடன் இருந்தேன். என்னை அவர்தான் வளர்த்தார். பாம்பு பிடிக்க அவருடன் பல இடங்களுக்கும் சென்றேன்.

“என்னை ஆற்றிலிருந்து காப்பாற்றியதாகவும் எனது உடலில் இருந்த விஷத்தை முறிக்க சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாகவும் பாம்பாட்டி கூறினார்,” என்றார் அகேஷ.்

Read Also  தமிழகத்தில் வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து.!

அவருடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றபோது, அங்குள்ள சிலரிடம் தனது சொந்த ஊர், சிறுவயது நண்பர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் பெயர்களை அகேஷ் நினைவு கூர்ந்துள்ளார்.

இதையடுத்து, இப்போது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்துள்ளார் அகேஷ் யாதவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *