போலி என் ஐ ஏ அதிகாரி எனக் கூறி தொழிலதிபரை மிரட்டி ரூபாய் இரண்டு கோடி பறித்த பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை 21 டிசம்பர் 2022 போலி என் ஐ ஏ அதிகாரி எனக் கூறி தொழிலதிபரை மிரட்டி ரூபாய் இரண்டு கோடி பறித்த பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா (36), மாலிக் (34), செல்லா (35), சித்திக் (35) ஆகியோர் சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வீடு எடுத்து தங்கி பர்மாபஜாரில் செல்போன் கடை வைத்துள்ளனர்.
இங்கு கடந்த வாரம் மண்ணடியில் உள்ள அப்துல்லா வீட்டுக்கு 6 பேர் கொண்ட கும்பல் என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி வீட்டில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது வீட்டிலிருந்த ரூ.10லட்சம், கடையில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் ரொக்கத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 6 பேர் நேற்று சரணடைந்தனர். இதில் இருவர் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பட்டியல் அணியின் மாவட்ட பொது செயலாளர் A.வேலு, மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர் R. கார்த்திக், ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும். அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடுள்ளார்.