தண்டனையில் இருந்து தப்பிக்க கொலை நாடகம் நடத்திய நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் .!

சென்னை 22 நவம்பர் 2022 தண்டனையில் இருந்து தப்பிக்க கொலை நாடகம் நடத்திய நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.!!

திருவண்ணாமலை அருகே கொலை வழக்கில் தண்டனைக்கு அஞ்சி கொலை செய்யப்பட்டதாக நாடகத்தை அரங்கேற்றிய குற்றவாளி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன்(34). இவர், மங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கில் அவர், மேல்முறையீடு செய்ததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மங்கலம் அருகே கீழ்பாலானந்தல் கிராமத்தில் மண்கண்டன் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம், செல்போன் கடந்த 30-10-22-ம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. மேலும் 50 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்தில் உள்ள வைக்கோல் போர் எரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மண்ணெண்ணை கேன் மற்றும் 2 இடங்களில் ரத்த கறை இருந்துள்ளது. மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் தடயம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மங்கலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின் பேரில், ஆரணியில் பதுங்கி இருந்த மண்கண்டனை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கொலை வழக்கில் தண்டனை கிடைக்கும் என்பதால், தன்னை கொலை செய்துவிட்டதாக மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றியது உறுதி செய்யப்பட்டது.

இந்த நாடகத்திற்காக, மண்கண்டன் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து ரத்த கறை தடயத்தை ஏற்படுத்த திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் வார்டு பாயாக பணி செய்து வரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், மேல ஊரப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியராஜன்(25), திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சத்தியராஜ்(26) ஆகியோர் உதவி செய்துள்ளனர். மேலும் ஆரணியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து மண்கண்டனை தங்க வைக்க அவரது தங்கையின் கணவரான வந்தவாசி அடுத்த பெரியகொழப்பலூர் கிராத்தில் வசிக்கும் சரத்குமார் (27) உதவி செய்துள்ளார்.

Read Also  நெசவு 2022 - கைத்தறி கண்காட்சியை மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் ji திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சென்னையில்  தொடங்கி வைத்தார்.

இது குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மண்கண்டன், அவருக்கு நாடகத்துக்கு உதவிய பாண்டியராஜன், சத்தியராஜ், சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *