காஞ்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் லிப்டில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு துறையின் உதவியால் மிட்பு.!
சென்னை 12 டிசம்பர் 2022 காஞ்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் லிப்டில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு துறையின் உதவியால் மிட்பு.!
அருகே உள்ள திருமண மண்டபத்தில் லிப்டில் சிக்கிய சிறுவனை 90 நிமிடங்கள் கழித்து மீட்ட தீயணைப்பு துறையினர்.
காஞ்சிபுரம் அடுத்த ஐயம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது உறவினர் திருமணம் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் அருகே உள்ள துளசி மஹாலில் இன்று நடைபெற்றது. அப்போது தனது மகன் மற்றும் மனைவியுடன் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், திருமணம் நடைபெற்று முடிந்த பின் சந்திரசேகரின் உறவினரான பெரியவர் ஒருவரை ஓய்வெடுக்க மாடியில் உள்ள அறைக்கு அவரது மகன் பிரவீன்குமார் லிப்ட் மூலம் அழைத்து சென்றான். பின்னர் அவரை விட்டு விட்டு சிறுவன் பிரவீன்குமார் மீண்டும் திருமண மண்ட லிப்டில் வந்தபோது திடீரென லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது.
சற்று பதைபதைப்புடன் காணப்பட்ட நிலையில் பிரவீன் குமார் அவனது தொலைபேசியில் இருந்து அவனது தந்தைக்கு தகவல் தெரிவித்தான். அதன்பேரில் உடனடியாக லிப்ட் பகுதிக்கு சென்று பார்த்தபோது லிப்டில் சிறுவன் சிக்கி உள்ளது உறுதியானது.
இதைத்தொடர்ந்து திருமண மஹாலின் மின் ஊழியர்கள் பழுது பார்த்தும் இயலாத நிலையில் உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் 108 அவசர உதவி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் அரசு, ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் திருமண மஹாலுக்கு விரைந்து சிறுவனை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. இதனால் லிப்ட் கதவை உடைத்து பிரவீன்குமாரை மீட்டனர்.
பின்னர் சிறுவனை சிறிது நேரம் கழித்து 108 அவசர ஊர்தி ஊழியர்கள் பரிசோதித்தில் உடலுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
காலை 10:15 மணிக்கு லிப்டில் சிக்கிய சிறுவன் 90 நிமிடங்கள் கழித்து தீயணைப்பு துறையின் உதவியால் மீட்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். பின்னர் சிறுவனை கண்ட பின்னே மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.