நடிகர் அருண் விஜய்யுடன் சேர்ந்து ஆக்ஷனில் கலக்கிய ‘மிஷன் சாப்டர்-1 பொங்கல் ஜல்லிகட்டில் எகிறி பாயும் வெற்றியுடன் ஸ்டண்ட் சில்வா !!

நடிகர் அருண் விஜய்யுடன் சேர்ந்து ஆக்ஷனில் கலக்கிய ‘மிஷன் சாப்டர்-1 பொங்கல் ஜல்லிகட்டில் எகிறி பாயும் வெற்றியுடன் ஸ்டண்ட் சில்வா !!

சென்னை 24 ஜனவரி 2024 2024-ல் தை பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்களில் எந்த திரைப்படம் திரைப்பட ரசிகர்களின்  எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.

அதில் ஏதாவது சில திரைப்படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில திரைப்படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.

இந்த தை பொங்கலில் வெளிவந்த திரைப்படங்களான தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்மஸ், ஹனுமான் மற்றும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 ஆகிய திரைப்படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரே திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக மிஷன் சாப்டர்-1 இந்த 2024 ஆம் ஆண்டு தைப்பொங்கலில் வெற்றி இடத்தை பிடித்துள்ளது.

மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை  பார்க்கும் பொழுது ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது.

பொதுவாக திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் என்றால் கதாநாயகர்களுடன் ஒருவர் அல்லது   நான்கு ஐந்து பேர் மோதுவது போல் சண்டைக்காட்சி அமைப்பார்கள்.

ஆனால் இந்த மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள்  திரைப்படம் பார்ப்பவர்களை மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Also  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் திரைப்படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும், சண்டைக் காட்சிகள்  மிகப் பிரமாண்டமாக இருக்கிறது என்றும்  ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் நடிகை எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்க தெறிக்க விடுகிறார்.

இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர்  ‘ஸ்டண்ட் சில்வா தான்!

ஸ்டண்ட் சில்வா, இவர் இந்திய திரைப்பட உலகில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர், ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.

இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் NTR நடிப்பில் வெளி வந்து ஆக்‌ஷனில் மிக பெரிய வெற்றி அடைந்த ‘எமதொங்கா’ திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி  தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி, மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 திரைப்படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல திரைப்படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தல’ அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா.

பிறகு அதே தல அஜித்துடன்  அருண் விஜய் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார்.

Read Also  ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் 08.செப்டம்பர்.(2023)  நடைபெறவுள்ளது.!

இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய்க்கு இந்த  திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்து தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

பொதுவாகவே அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் சினிமாவில் வில்லனாக நடிக்கும் எல்லோரும் நிஜத்தில் நல்லவர்கள்தான் அந்த விதத்தில் ஸ்டண்ட் சில்வாவும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல.

பார்ப்பதற்கு நூடுல்ஸ் தலையுடன் முகத்தில் தழும்புடன் கரடு முரடாக காட்சியளிக்கும் இந்த ஸ்டண்ட் சில்வாவின்   மனம் ஒரு பச்சை குழந்தை போன்றது, இது பார்ப்பவர்களுக்கு  தெரியாது, ஆனால்  அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர் ஒரு சொக்கத்தங்கம் என்று கண்டிப்பாக கூறலாம்.

இதற்க்கு சான்றாக இவர்  தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்  ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின்  தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகபெரிய எமோஷனல் வெற்றி பெற்ற திரைப்படமாக  அமைந்தது.

இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு  பாதுகாப்பாக   வளர்க்க வேண்டும்  என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்றும் ஒரு உன்னதமான கருத்தை சொல்லி,இந்த திரைப்படத்தை ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல்  மிகபெரிய பாடமாக செதுக்கியிருந்தார்.

சித்திரை செவ்வானம் திரைப்படத்தை இயக்கிய பிறகு  ஏற்கனவே ஒப்புக்கொண்ட  பல  திரைப்படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே  திரைப்படங்கள் இயக்க முடியவில்லை.

Read Also  Colors Tamil brings powerhouse of talents with the launch of its brand-new non-fiction talent show Vellum Thiramai starting June 4th

இந்த 2024 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான  சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார் ஸ்டண்ட் சில்வா.

செய்யும் தொழிலே தெய்வம் என்றும் நாம் செய்யும் தொழிலுக்கு என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே இவருடைய கொள்கை.

இதுவே இவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.

எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை சிறப்பாக   செய்து முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி அடிப்பதில் வல்லவரான ஸ்டண்ட் சில்வா இந்த 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த மிஷன் சாப்டர் -1 திரைப்படத்தின் வெற்றியை  தொடர்ந்து அவரின் திரையுலக வாழ்வில் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் என்பதைப் போல இனி அனைத்தும் ஸ்டண்ட் சில்வா அவர்களுக்கு ஏறு முகமே.!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *