பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் “நாதாபிஷேகம்”!!

சென்னை 08 அக்டோபர் 2022 பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் நாதாபிஷேகம்.!!

80ஆவது அவதார தின நிகழ்ச்சி – 80 கர்நாடக சங்கீத வித்வான்களின் ‘தத்தப்ரியா’ புதிய ராக இசை

மக்களிடையே ஒற்றுமையும் சகோதர பாசமும் மேலோங்க, ஆன்மீகம் தழைக்க, கர்மாவினால் தவிக்கும் ஏழைமக்களுகு உதவ, சனாதன தர்மத்தை உலகில் நிலைநாட்ட, இறைவன் சத்குருவை, நம்மைப் போன்ற உருவில் அவதார புருஷராக படைத்து நமக்கு அருள்கிறார்.

அந்த வகையில், அவதூத தத்த பீடத்தின் தலைமை பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதார புருஷராக அவதரித்து தர்மத்தின் தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் அமைதிக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் நம்மிடையே அவதரித்து வந்திருக்கிறார். உலக

பரம பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்கள் கர் நாடகாவில், மேகதாது என்ற இடத்தில், ஸ்ரீ ஜெயலெக்ஷ்மி மாதாவிற்கும், ஸ்ரீ நரசிம்ஹ சாஸ்திரிக்கும், காவேரிக்கரையில் உடல் முழுவதும் வீபூதி, ருத்ராக்ஷ மாலையுடன் அவதரித்தவர்.

இவர் ஒருஅவதார புருஷர், ராஜ ரிஷி, யோகி, நாத பிரம்மா, மஹா பண்டிதர், புலமை வாய்ந்த ஆன்மீகக் கவிஞர், ‘கீபோர்டு’ இசை வித்தகர், இசை மேதை, ஆழ்ந்த தத்துவ ஞானி, ‘கிரியா யோகா’ ஆசிரியர், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.. பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜியின் முக தேஜஸிலிருந்தே நாமனைவரும் இதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Read Also  100 ஆண்டுகளுக்கு முன் உலகைச் சுற்றி வந்த பயணிகள் சொகுசுக் கப்பல்!

இசை மேதையான பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிஜி, ‘MUSIC FOR HEALING’ அதாவது இசையின் மூலம் வியாதிகளை குணப்படுத்துதல், கட்டுப்படுத்துதல்’ என்ற ஒரு இயற்கை ரீதியான வகையில், அதற்கான ராகங்களை கண்டெடுத்து, தனது KEY BOARD இசையினால், பக்க வாத்தியக் குழுவினருடன் இசைத்து, பலரின் தீர்க்க முடியாத வியாதிகளை தீர்த்த தீர்க்கதரிசி. அந்த இசை அனைவரையும் மயக்கும் ஒரு அற்புதமான இசை என்றால் அது மிகையாகாது.

இது தவிர 5000 பஜனைப் பாடல்களை எழுதிய பெரும் ‘வாக்யேக்காரர்’. அவற்றை, கர்நாடக இசைக்கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கர்நாடக இசையில் அவர் இயற்றிய ராகங்கள் மாறாமல், கீர்த்தனைகளாக சங்கீத மாற்றியமைத்திருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமில்லாத பல புதுப் புது ராகங்களில் அவர் பஜனை பாடல்களை எழுதி, இயக்கி, Key boardல் வாசித்தும், அவர் பாடக் கேட்பது தெய்வீகமாக இருக்கும், ராக தேவதைகள் அவரிடமே குடி கொண்டிருப்பது புலப்படும். நமக்கு நன்கு

பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் வெறும் இசையோடு நின்று விடவில்லை, புராணங்களையும் இதிஹாசங்களையும் நமக்கு தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் எடுத்துரைத்து நடுவில் தனது பஜனைப் பாடல்களையும் தனது குரலில் துன்பங்கள் துயரங்களையும் மறந்து கண்ணீர் வடிக்கும் அனைவரும் வாழ்வின் அளவுக்கு அந்த இசையும், சொற்பொழிவும் இருக்கும் என்பதை உணரலாம் ஆனந்தக் பாடி

இப்பேற்பட்ட ஆன்மீக சக்தி வாய்ந்த ஜகத்குருவான பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்களின் 80 ஆம் அவதார தினம் கடந்த மே மாதம் 26ஆம் தேதி மைசூரு அவதூத தத்தபீடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள பக்தர்கள் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் தங்கள் அன்பை வெளிப்படுத்த பெரிய கேக்குகளை வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

Read Also  தண்ணீர் வாங்க சாலையை கடந்த போது நடந்த விபரீதம்.. டூவிலர் மோதியதில் சிறுவன், கல்லூரி மாணவன் பரிதாப பலி!

இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் மேற்கொண்டு இந்தியா திரும்பியதும், நவராத்ரி விழாவை மைசூரில் ஆன்மீக சுற்றுப்பயணம் நடத்திவிட்டு தமிழக பக்தர்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி சென்னைக்கு ஆன்மீக விஜயம் செய்கிறார்.

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமத்தின் சார்பாக வரும் 15ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5.15 முதல் இரவு 9.00 மணிவரை, டிடிகே சாலையிலுள்ள ‘நாரதகான சபா’ கலையரங்கில்80 கர்நாடக சங்கீத வித்வான்கள், பிரபல மிருதங்க வித்வான் திரு. காரைக்குடி மணி தலைமையில், மிகப்பிரபலமான சங்கீத வித்வான்களான திருமதி சுதா ரகுநாதன், திருமதி. நித்ய ஸ்ரீ, தமிழ்நாடு இசைக் கல்லூரியின் துணை வேந்தர், மிருதங்க வித்வான் திரு. திருவாரூர் பக்தவத்சலம பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ, பத்மபூஷன், திருமதி. பத்மா சுப்ரமணியம் இவர்களுடன் பிரபல தொழிலதிபர் திரு. நல்லி குப்புசாமி செட்டி உட்பட பல பிரபல வித்வான்கள் ஒரே சமயத்தில், அவதார புருஷரான பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்களுக்காக ‘தத்தப்ரியா’ எனும் புதிய ராகத்தில் கீர்த்தனை கண்கொள்ளா பாடி ‘நாதாபிஷேகம்’ செய்வது காட்சியாக மிகையாகாது, இருக்கப் போகிறது என்றால்

தேதி: 15.10.2022 நேரம்: மாலை 5.15 முதல் இரவு 9.00 மணிவரை இடம்: நாரத கான சபா டிடிகே சாலை சென்னை.