ரெபெக்ஸ் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!
சென்னை 13 ஜனவரி 2023 ரெபெக்ஸ் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!
சென்னை, ஜனவரி 13, 2023: ரெபெக்ஸ் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு விதிகளை
முழுமையாகப் பின்பற்றி, பாதுகாப்பாக பயணம் செய்வதை வலியுறுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெபெக்ஸ் குழுமத்தின் ஊழியர்கள், சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு (ஜன.11 முதல் ஜன.17), ரெபெக்ஸ் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
.
கடந்த 2022 புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் சுமார் 1,55,622 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 59.7 சதவீத உயிரிழப்புகள் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டுள்ளது.
வணிக குழுமமாகத் திகழும் ரெபெக்ஸ் குழுமம் சாலையில் செல்லும் ஒவ்வொருவரின் விலை மதிக்க முடியாத உயிரின் மதிப்பும், சாலைகளை பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய செயல்பாடுகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (இ.எஸ்.ஜி.) (Environment, Society and Governance (ESG) என்ற முக்கிய அம்சங்களை ரெபெக்ஸ் குழுமம் கொண்டு செயல்படுகிறது. மேலும், ரெபெக்ஸ் குழுமம் மக்கள், பூமி மற்றும் லாபம் என்ற மூன்று அணுகுமுறைகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் சீரான உலகத்தை அமைக்கும் முக்கிய அம்சமாக திகழ முடியும். Environment, Society and Governance (ESG) சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (இ.எஸ்.ஜி. ) ஆகியவைகளை இணக்கமாக செயல்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான வணிகத்தில் முக்கிய பங்கு அளிக்கிறது. அத்துடன் எங்கள் குழுமம் இந்த அணுகுமுறைகளை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும். எங்கள் குழுமம் சார்பில் பொதுமக்களிடையே சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் சமுதாயத்திற்கு எங்களின் சேவை மற்றும் பங்களிப்பை திரும்ப செலுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து, ரெபெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் கூறியது:
ரெபெக்ஸ் குழுமம் வணிக இலக்குகளை அடையும் அதே வேளையில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் முழு பங்களிப்புடன் செயல்படும். ரெபெக்ஸ் குழுமம் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (இ.எஸ்.ஜி.) ஆகியவைகளில் இணக்கமாகச் செயல்பட்டு தீர்வு காணும். மேலும், கார்பன் பயன்பாடற்ற நிறுவனமாக வணிகத்தில் செயல்படும். எங்கள் வணிகத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் வெற்றியை தீர்மானிக்கும். அதில் மதிப்பு உருவாக்குதலில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்று முன்னுதாரணமாக விளங்குதல் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் (இ.எஸ்.ஜி.) சாம்பியன்களாக மாறுதல் ஆகிய இரு அம்சங்களாகும்.
சமூகத்திற்கு திரும்ப செலுத்துதல் என்பதைப் பிரதானமாக கொண்டு செயல்படும் வகையில், தற்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.