உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கேடு கெட்டவர் என்றும் குஷ்பு விமர்சனம்.
சென்னை 14 மே 2022 உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கேடு கெட்டவர் என்றும் குஷ்பு விமர்சனம்.
பானிபூரி விற்பவர்கள் இந்தி பேசுபவர்கள் என்று அமைச்சரின் கருத்துக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவும் விமர்சனம்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தி பேசும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் விரைவில் பானிப்பூரி விற்கத்தான் போகிறார்கள் அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியது வெட்கக் கேடு, இது போன்ற கேடு கெட்ட மனிதர்களிடம் நாம் இவற்றை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா என தெரியவேண்டும் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.