சென்னையில் திமுக பிரமுகர் உடலை துண்டு துண்டாக்கி தலை கூவத்தில் வீசிய கொலையாளி வெளியிட்ட பகீர் தகவல் வெளியானது.!

சென்னை 14 மே 2022 சென்னையில் திமுக பிரமுகர் உடலை துண்டு துண்டாக்கி தலை கூவத்தில் வீசிய கொலையாளி வெளியிட்ட பகீர் தகவல் வெளியானது.!

மாயமான சக்கரபாணியின் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ராயபுரம் கார்டன் 3வது சந்து பகுதியில் இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.

சக்கரபாணியின் செல்போன் அந்த பகுதியில் உள்ள தமிம் பானு என்பவரது வீட்டில் இருப்பதை டவர் லொகேஷன் மூலம் காவல்துறை கண்டறிந்து அங்கு சென்றனர்.

சென்னை ராயபுரத்தில் கடந்த 10ம் தேதி காணாமல் போன திமுக பிரமுகர் சக்கரபாணி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (65). இவர் திருவொற்றியூர் 7வது திமுக வட்ட பிரதிநிதி. பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

கொடுத்த கடனுக்கு வட்டிப் பணம் வாங்க செல்வததாக கூறிவிட்டு, 10ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் மணலி காவல் நிலையத்ததில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான சக்கரபாணியின் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ராயபுரம் கார்டன் 3வது சந்து பகுதியில் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

Read Also  ஆஸ்திரேலியா, மண்டல சிவில் கடல்சார் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது!

சக்கரபாணியின் செல்போன் அந்த பகுதியில் உள்ள தமிம் பானு என்பவரது வீட்டில் இருப்பதை டவர் லொகேஷன் மூலம் போலீசார் கண்டறிந்து அங்கு சென்றனர்.

இதனையடுத்து, தமிம் பானு வீட்டிற்கு உள்ளே சென்றதும் ரத்த வாடை வீசியது.

பின்னர், குளியல் அறையில் தலையில்லாமல் துண்டு துண்டாக வெட்டி கவரில் போட்டு வைத்திருந்த மனித உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொலை செய்யப்பட்டவர் மாயமான சக்கரபாணி என்பது உறுதியானது.

இதுதொடர்பாக ராயபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடலை  மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் இருந்த தமிம் பானு, அவரது சகோதரர் வாசிம் பாஷா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்த போது பகீர் தகவல் வெளியானது.

பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் தமிம் பானு என்பவருடன் சக்கரபாணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தெரிந்து தமிம் பானுவின் கணவன் வீட்டை மாற்றி வேறு தெருவில் வீடு பார்த்து குடியேறியுள்ளார்.

இந்நிலையில், கடந்தத 10ம் தேதி கணவன் ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் தமிம்பானு சக்கரபாணியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்த தமிம்பானு சகோதரர் வாசிம் பாஷா சக்கரபாணியை கண்டு ஆத்திரமடைந்தார்.

இதனையடுத்து, அரிவாள் மணையை எடுத்து சக்கரபாணியை வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, குளியறையில் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தலையை மட்டும் கவரில் எடுத்துச்சென்று கூவம் ஆற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *