தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை 23 மே 2022 தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா மற்றும் சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன் வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய். 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூபாய். 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள் ரூபாய். 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் இவை அனைத்தும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கியது.
இதனை அடுத்து கடந்த 18ஆம் தேதி முதற்கட்டமாக ரூபாய்.8.84 கோடி மதிப்புள்ள அரிசி மற்றும் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை துறைமுகத்தில் புறப்பட்ட இந்த கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அந்த பொருட்கள் இன்று இலங்கைக்கு சென்றடைந்தன.
நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பீரிசிடம், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இந்த பொருட்களை ஒப்படைத்தார்.