கலப்பு திருமணம் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…!!!

சென்னை 06 ஜூன் 2022 கலப்பு திருமணம் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…!!!

சூளகிரி அருகே, கலப்பு திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்த விவகாரத்தில், மனைவியின் அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி ஏனுசோனை அடுத்த பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் சந்தோஷ்(23). நல்லாரப்பள்ளியில் உள்ள இரும்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார். மீனா என்ற மாற்று சமுதாய பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், தியாகரசனபள்ளி-பி.கொத்தப்பள்ளி சாலையில், சந்தோஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டிச் சென்று, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, தப்பினர். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், சந்தோஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்

இதுதொடர்பாக, குமுதேப்பள்ளியைச் சேர்ந்த மீனாவின் அண்ணன் முருகேஷ்(25), அவரது நண்பர்கள் குமார்(24) மற்றும் 18 வயதுடைய ஒருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மீனாவும், சந்தோசும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு மீனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதனால் மீனாவின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். தங்கை வீட்டை விட்டு ஓடிப்போய், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால், அவமானம் அடைந்த முருகேஷ், தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு, அவரை தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *