திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள்  பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

சென்னை 27 ஜூலை 2022 திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள்  பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம், ஜி.எஸ்.டி வரி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மின்கட்டணம் உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என திமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், நடிகர் சங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே நினைவகம் அமைத்துள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், திமுக அறக்கட்டளை சார்பாக அண்ணா அறிவாலயத்தில் ‘பேனா’ வை வைக்கலாம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ‘பேனா’ வைக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், மனிதநேயத்தை மதிக்கும் ஒரே தலைவர் என்பதால் அப்துல் கலாம் இறுதி அஞ்சலியில் விஜயகாந்த் கலந்து கொண்டனர் எனக் கூறினார். மேலும், மாநில அரசு மட்டுமன்றி மத்திய அரசும் மக்களை வஞ்சிப்பதாகத் தெரிவித்த அவர், ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

என் மக்களிடம் வரி வசூல் செய்கிறார்கள் வருத்தப்பட்ட அவர், நிதி இல்லை என்றால் அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வசூல் செய்தால் சிறப்பாக அரசை நடத்தலாம் எனவும், மதுரையை எரித்த போது கண்ணகி எப்படி வந்தாரோ அதுபோல, மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இந்த பிரேமலதா விஜயகாந்த் வருவேன் எனக் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *