வேலைக்கு சேர்ந்த 2 வாரத்திலேயே கடையில் கைவரிசை: காட்டிய வடமாநில வாலிபர்கள்!!

சென்னை 02 ஆகஸ்ட் 2022  வேலைக்கு சேர்ந்த 2 வாரத்திலேயே கடையில் கைவரிசை: காட்டிய வடமாநில வாலிபர்கள் கைது !!

சென்னை பூக்கடையில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை மற்றும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருபவர் ஜெலாம்சிங்.

2 வாரத்திற்கு முன்பு இவரது கடையில் வேலைக்குச் சேர்ந்த ராஜாராமிடம் கடையின் கல்லா சாவி மற்றும் கடையின் சாவியை நம்பிக்கையாக கொடுத்து உள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த இவர் தனது உறவினருடன் சேர்ந்துகொண்டு கடையை கொள்ளையடித்துள்ளார்.

ரோந்துப்பணியில் இருந்து காவல்துறை இவர்களை கைது செய்தது.