இன்று பெரியார் 144வது  பிறந்த நாளான செப்.17ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.!

சென்னை 17 செப்டம்பர் 2022  இன்று பெரியார் 144வது  பிறந்த நாளான செப்.17ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.!

மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடை பிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டுவீட்டரில் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் தன்னுடைய டுவீட்டரஅ பக்கத்தில் கூறி இருப்பதாவது…

“சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும் புகழை வணங்கி போற்றுகிறேன்””.

இவ்வாறு தன்னுடைய டுவீட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *