தமிழக  அமைச்சரவை விரிவாக்கம்; உதயநிதிக்கு எந்த துறை? ஆலோசனை தீவிரம்!

சென்னை 11 டிசம்பர் 2022 தமிழக  அமைச்சரவை விரிவாக்கம்; உதயநிதிக்கு எந்த துறை? ஆலோசனை தீவிரம்!

தமிழ்நாட்டின் அமைச்சராக டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் மேற் கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார்.

ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களை கடந்துள்ள நிலையில் அமைச்சரவையில் ஒரு முறை மட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மட்டும் மாற்றப்பட்டது.

இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் மெய்யநாதனிடம் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வந்த சிறப்பு முயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை அமைச்சர் கவனித்து வந்த வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்கள் ஆகியவை உதயநிதிக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி வசம் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை அமைச்சராகவுள்ள பெரியகருப்பனிடம் கூட்டுறவுத் துறையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும், அமைச்சர் ராமச்சந்திரனிடம் உள்ள வனத்துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Also  சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக குப்பம் தொகுதியில் நடிகர் விஷாலை களமிறக்க திடடமிட்டு வரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

தமிழ்நாட்டின் அமைச்சராக டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *