பெரிய அளவில் காயம் இல்லாமல் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாடினர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

பெரிய அளவில் காயம் இல்லாமல் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாடினர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை 13 நவம்பர் 2023 தமிழகத்தில், 2 சதவீதம் வெடிவிபத்து தான் நடந்துள்ளது.

இந்த வருடம் வெடி விபத்தில்லா தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்டுள்ளது,

என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்…

சென்னையில் அவரது பேட்டி…

தீபாவளி பண்டிகையை ஒட்டி, வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு, தீக்காய சிறப்பு பிரிவு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும், 95 மருத்துவமனைகளில், 750 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் அதில் அடங்கும்.

கடந்த இரண்டு நாட்களாக, தமிழகத்தில் வெடிவிபத்து தீ காயங்கள் ஏற்படவில்லை.

இது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெடி விபத்தில் சிறிய அளவில் காயம் பட்டவர்கள் இரண்டு பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவருக்கு சிகிச்சை நடைபெறவுள்ளது.

வரும் 2025ம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத தமிழகம், காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்பது இலக்கு. தொழு நோயாளிகளை மாவட்ட வாரியாக கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *