பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நபர் கதறி அழுத பெண் காவலர் – நடந்தது என்ன?

சென்னை 02 ஜனவரி 2023 பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நபர் கதறி அழுத பெண் காவலர் – நடந்தது என்ன?

முன்னாள் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டதில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அருகே இருந்த காவலர் ஒருவரை பிடித்த நிலையில், மற்றோருவர் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

Read Also  ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார்!!

அப்போது விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

திமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகள் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததைர பெரிதுபடுத்த வேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவலர் கதறி அழுதும் எந்த நடவடிக்கையும் செய்ய முடியாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த பெண் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *