தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ஆம் தேதி வெளியிடுவேன் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு!

சென்னை 03 ஜூன் 2022 தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ஆம் தேதி வெளியிடுவேன் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி. ஆட்சியின் எட்டுஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.

இந்த சாதனை விளக்க பொது கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது…

தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தற்போது மத்திய மந்திரியாக உள்ள முருகன் கடுமையாக உழைத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

ஆனாலும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் 3 இலாகாக்களை கொடுத்து அழகு பார்த்துள்ளது.

இதனால் தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் மாற்றத்திற்கான முன்னேற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது.

வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி. வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார்.

பாரதிய ஜனதா கட்சி. ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட எந்த ஒரு மந்திரி மீதும் சிறிதளவு கூட குறை சொல்ல முடியாது.

அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றனர்.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம்.

Read Also  மீண்டும் தேர்தல் வரும் போது திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

வரும் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சட்டமன்றத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் செல்வார்கள் என இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *