ஜவான்’ பாடல்கள், ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த நடிகர் ஷாருக்கான்.!!

ஜவான்’ பாடல்கள், ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த நடிகர் ஷாருக்கான்.!!

சென்னை 18 ஜூலை 2023 ஃபரா கான், வைபவி மெர்ச்சன்ட் & ஷோபி ஆகியோரின் கடுமையான உழைப்பில் அசத்தலான ‘ஜவான்’ பாடல்கள், ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த ஷாருக்கான் .

ஷாருக்கானுக்குத் தனது ரசிகர்களை எப்படி உற்சாகப்படுத்துவது அவர்களை ஆச்சர்யத்தி ஆழ்த்துவது எப்படி என்பது அத்துபடி. குறிப்பாக அவரது நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ‘ஜவான்’ படம் குறித்துத் தொடர் விருந்து வைத்து வருகிறார். ப்ரிவ்யூ மற்றும் சமீபத்திய புதிய போஸ்டர், ரசிகர்களுக்கு ஜவான் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த கிங் கானுடன் தங்கள் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், ‘ஜவான்’ தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர். #AskSRK அமர்வின் போது ‘ஜவான்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஷாருக் தனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்த அதே வேளையில், படத்தின் பாடல்களைக் குறித்துக் குறிப்பையும் கொடுத்தார். இந்தியாவின் முன்னணி நடன அமைப்பாளர்களின் உழைப்பில் பாடல்கள் மிக அழகாக வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

‘ஜவான்’ படத்தின் பாடல்கள் குறித்த ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த ஷாருக்கான், “வருகிறது வருகிறது விரைவில் வருகிறது. ஃபராவும், வைபவியும் அட்லீயுடன் இணைந்து எடிட் செய்து வருகிறார்கள், ஷோபியும் பணியாற்றியுள்ளார், விரைவில் உங்களிடம் கொண்டு வந்துவிடுவோம். ஃபரா மற்றும் வைபவியுடன் ஷாருக்கின் வெற்றிகரமான பாடல்களின் வரலாறு அனைவரும் அறிந்ததே, இப்போது ஷோபியும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் ஆல்பத்தை எதிர்பார்க்கலாம்.

Read Also  ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திப்பின் போது தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் அருண் விஜய்.

ஜவானின் அதிரடியான ப்ரிவ்யூவில், இதுவரை பார்த்திராத ஷாருக்கானின் புதுமையான தோற்றங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வீடியோ இணைய தளங்களின் பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் 24 மணிநேரத்தில் 112 மில்லியன் அளவில், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்குச் சாதனை படைத்துள்ளது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *