காஷ்மீர் சர்வதேச எல்லையில் இரவு ஊரடங்கு; 2 மாதத்திற்கு அமல்.!
சென்னை 04 ஜனவரி 2023 காஷ்மீர் சர்வதேச எல்லையில் இரவு ஊரடங்கு; 2 மாதத்திற்கு அமல்.!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட சர்வதேச எல்லை அமைந்த பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீ. பரப்பளவிற்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
இதனால், மக்கள் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவசரகால பயணம் தேவையென்றால் செல்லும்போது, உடன் ஆவணங்களை எடுத்து செல்லும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது என துணை போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.
இந்த தடை உத்தரவு முன்பே விலக்கி கொள்ள அல்லது வாபஸ் பெறப்பட கூடும். அப்படி இல்லாத சூழலில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் 2 மாதங்களுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடர்பனியான சூழலில், எல்லை கடந்த ஊடுருவல், ஆளில்லா விமானம் வழியே ஆயுத கடத்தல் உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எல்லை பாதுகாப்பு வீரர்கள், தொடர்ந்து சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.