கடந்த 10 ம் தேதி மாலத்தீவு தலைநகர் மாலியில் நடந்த தீ விபத்தில் 10 நபர்கள் மரணம் அடைந்தார்கள்.!

சென்னை 17 நவம்பர் 2022 கடந்த 10 ம் தேதி மாலத்தீவு தலைநகர் மாலியில் நடந்த தீ விபத்தில் 10 நபர்கள் மரணம் அடைந்தார்கள்.!

இதில் 8 நபர்கள் இந்தியர்கள் 2 நபர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.8 இந்தியர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெனில் அவர்களது பூத உடல் மூன்று தினங்கள் முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது நபர் தேன்மொழி திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பூத உடல் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதியாக காரைக்குடியைச் சேர்ந்த கனேசன் அவர்களது பூத உடல் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது..

இந்த தீ விபத்து செய்தி அறிந்து நமது மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்கள் இறந்த தமிழர்களின் உடல்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் வெளி நாடு வாழ் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் ஐயா அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் துறை சார்ந்த அதிகாரிகள் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் மற்றும் திரு.ரமேஷ் சார் அவர்கள் மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி விரைவாக இறந்த உடல்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் இன்றோடு அனைத்து பூத உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் உதவியாக இருந்த தமிழக முதலமைச்சர் மான்புமிகு ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் ஐயா அவர்களுக்கும் மற்றும் கமிஷ்னர் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் அவர்களுக்கும் இணை இயக்குநர் திரு.ரமேஷ் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read Also  திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம்.. தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்..!

மேலும் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மாலத்தீவு தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..

இங்கனம்: என்றும் மக்கள் பணியில்.ஷேக் சலீம் மற்றும் மகேஷ்.வெளி நாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச்சங்கம் மாலத்தீவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *