தனியார் பேருந்துகளில் முன்பதிவு கட்டணம் உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னை 15 செப்டம்பர் 2022 தனியார் பேருந்துகளில் முன்பதிவு கட்டணம் உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி!!

தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்தச் ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் ரயில்களில் முன்பதிவு தொடங்கியுள்ள  நிலையில் ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்தச் ஊர்களுக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளை அணுகி வருகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி கொள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர் ,திருநெல்வேலி , நாகர்கோவில் திருச்செந்தூர் ஊர்களுக்குச் செல்ல தனியார் பேருந்துகளில் டிக்கெட்டின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

குறிப்பாகச் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல 2500 முதல் அதிகபட்சமாக 3200 வரை கட்டணம் உயர்வு அதேபோல, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்ல 2950 முதல் அதிகபட்சமாக 3950 வரை கட்டணம் உயர்வு மேலும் சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல 2000 முதல் அதிகபட்சமாக 3100 வரை கட்டணம் உயர்வு.

மேலும் நாகர்கோவில் ,திருச்செந்தூர் ,தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்னையிலிருந்து தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்ல கட்டணமானது இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண பணத்தில் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டணத்தை உயர்த்தி இருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Also  பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய ஆதித்யராம் குழுமம்!!

இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி இருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *