மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா பயன்படுத்திய கார் ரூ.6 கோடிக்கு ஏலம்..!!

சென்னை 29 ஆகஸ்ட் 2022 மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா பயன்படுத்திய கார் ரூ.6 கோடிக்கு ஏலம்..!!

லண்டன்: மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா பயன்படுத்திய கார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற பிரிட்டன் இளவரசி டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது 25வது நினைவு தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய கார் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் பிரிட்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் கலந்துக்கொண்டனர்.

காருக்கான ஏலம் இந்திய மதிப்பில் 93 லட்சம் ரூபாய்க்கு தொடங்கியது. பலத்த போட்டிக்கு இடையே இறுதியில் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டயானா பயன்படுத்திய Ford கார் ஏலத்தில் எடுக்கப்பட்டது. வடமேற்கு இங்கிலாந்தின் ஆர்டர்லே எச் என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் இந்த காரை வாங்கி இருப்பதாக கூறியிருக்கும் ஏல நிறுவனம், அவரது விவரங்களை உடனடியாக வெளியிடவில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *