வினாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்பி உங்களை உற்சாகமூட்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நாள் முழுவதும்  ஒளிபரப்புகிறது.!

சென்னை 31 ஆகஸ்ட் 2022 வினாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்பி உங்களை உற்சாகமூட்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நாள் முழுவதும்  ஒளிபரப்புகிறது.!

சென்னை, ஆக.31–விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆகஸ்ட் 31, புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உங்களுக்காக அற்புதமான திரைப்படங்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் முதல் ஏராளமான திரைப்படங்களை நாள் முழுவதும் பார்த்து ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழுங்கள்.

இந்த நிகழ்ச்சிகளை வசந்த் அன்ட் கோவுடன் சிறப்பு ஸ்பான்சர்களான கரூர் வைஸ்யா வங்கி, குமரன் பிராண்ட் கருவாடு, நாச்சியார் மதுரை மற்றும் ஆர்யாவின் கேப்டன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

விஜே ஆண்ட்ரூஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், ஸ்டாண்ட்-அப் காமிக் மெர்வின், யூடியூபர் ஆர்ஜெ விக்னேஷ்காந்த், பேச்சாளர்- சசி லயா மற்றும் ஆர்ஜெ ஆனந்தி உள்ளிட்ட பேச்சாளர்கள் பங்கேற்கும் ‘வேலை செய்யும் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பா – இல்லையா’ என்ற தலைப்பில் பாக்யராஜ் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பட்டிமன்றத்தை தொடர்ந்து  ஹாலிவுட் திரைப்படமான சார்லிஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ரோட்டில் என்னும் திரைப்படம் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியு மற்றும் டெமி மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் காலை 9.30 மணிக்குஒளிபரப்பாகிறது.

இந்த படத்தின் கதையானது, இரகசியப் பட்டியலில் உள்ள ஐந்து பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். சார்லஸ் டவுன்சென்ட் டிடெக்டிவ் ஏஜென்சியின் (பேரிமோர், டயஸ் மற்றும் லியு) மூன்று துப்பறியும் நபர்களான ‘ஏஞ்சல்ஸ்’, அது குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

அவர்களுடன் புதிய கூட்டாளியாக (பெர்னி மேக்) அவர்களின் சாகசத்தில் இணைகிறார்,

அவர்கள் இணைந்து எதிரிகளை எதிர்கொள்கிறார்கள். அத்துடன் ‘ஜுமாஞ்சி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படமும், காலை 11.30 மணிக்கு ‘அயங்கரன்’ திரைப்படமும், மதியம் 2.30 மணிக்கு ‘கேஜிஎப் சேப்டர் 1’ ஆகிய திரைப்படங்களும் ஒளிபரப்பாகின்றன. மாலை 6:00 மணிக்கு துல்கர் சல்மான் நடித்த ‘ஹே சினாமிகா’ பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

Read Also  திரைப்பட மானியம், விருது தேர்வு குழுவினரை வெளிப்படையாக அறிவிப்பதா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பட அதிபர் கே ஆர் கண்டனம்!!

இந்த திரைப்படத்தை பிருத்வி வுமன்ஸ் இன்னர்வேர்ஸ் மற்றும் சிறப்பு பார்ட்னர் ஆர்யா வின் கேப்டன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.  கணவனிடம் இருந்து வெளியேற துடிக்கும் மனைவியின் வாழ்க்கையை சுற்றி வரும் இப்படத்தில் அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்ச்சியாக, இரவு 9:30 மணிக்கு ஆதி பினிசெட்டி மற்றும் ஆகாங்ஷா சிங் நடித்த ‘கிளாப்’ என்ற திைரப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இது குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தக பிரிவு தலைவர் ராஜாராமன் கூறுகையில்,  விநாயகர் சதுர்த்தி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புனிதமான நாள் ஆகும். இதுபோன்ற மறக்கமுடியாத பண்டிகைகளில் நாங்கள் எங்கள் பார்வையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்குகிறோம்.

மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கும் வகையில், சிந்தனையைத் தூண்டும் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த இடைவிடாத பொழுதுபோக்கு நிறைந்த பல்வேறு தரமான திரைப்படங்களை உங்களுக்காக ஒளிபரப்புகிறோம் என்று தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *