திமுக நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!
சென்னை 26 செப்டம்பர் 2022 திமுக நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 35-வது வட்ட முன்னாள் பொருளாளர் அமுல் ராஜ் என்பவர் இன்று மதியம் அண்ணா அறிவாளயத்தின் முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைக்கு முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனைப் பார்த்த, திமுகவினர், போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை சமாதானம் செய்தனர்.
அண்ணா அறிவாளயத்தில் திமுக மாவட்ட அமைப்புக்களுக்கான தேர்தல் மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், திமுக நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் வட்ட பொருளாளர் பதவியைக் கொடுக்கவில்லை என்று அமுல் ராஜ் என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.