தந்தை பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை தமிழக முதல்வர்!

சென்னை 26 ஏப்ரல் 2022 தந்தை பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை தமிழக முதல்வர்!

பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்,

பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அப்போது, இந்த அரசு மக்களுக்கானது, எனவே முடியுமா என்று எண்ணத் தேவையில்லை.

முடியாத பலவற்றை நாம் முடித்துக் காண்பித்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எந்த நுழைவுத்தேர்வும் எந்த வகையிலும் நுழையக்கூடாது என்பதே நம்முடைய எண்ணம்.

ஆளுநரிடம் நாம் கேட்பது ஒப்புதல் இல்லை, சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவே கேட்கிறோம்.

இதில் தற்போது காலதாமதம் ஆகி வருகிறது.

இதனை தமிழக அரசு முறையாக எதிர்கொண்டு வெற்றிபெறும். மாணவர்களின் துயரம் விரைவில் துடைக்கப்படும் என் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *