பொது மக்களுக்கு காவல் துறை ஆணையர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாறாதீர்கள்!

சென்னை 05 மே 2022 பொது மக்களுக்கு காவல் துறை ஆணையர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாறாதீர்கள்!

பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாறாதீர்கள்.

ஏற்கனவே இரண்டு காவலர்கள் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாற்றம் அடைந்துள் ளார்கள் என  சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொது மக்களுக்கு காவல்ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், சமீப காலமாக கிரிப்டோ கரன்சி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மோசடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இதுபோன்ற கவர்ச்சிகரமான அழைப்புகளிலும், சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இரண்டு காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் சுமார் ரூபாய்.1.5 கோடிவரை சிக்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து இழந்துள்ளனர்.

இதனால் சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இது போன்ற மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம் எனவும் காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

எனவே, தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கியில் முதலீடு செய்யுங்கள் என்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்யும்போது கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *