சமைத்த உணவை ருசியாக இருக்கிறதா என்று சாப்பிட்டு பார்க்கும் ரோபோட்..!
சென்னை 05 மே 2022 சமைத்த உணவை ருசியாக இருக்கிறதா என்று சாப்பிட்டு பார்க்கும் ரோபோட்..!
ரோபோட் செஃப் ஒன்றிற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்க்க பயிற்சி அளித்து வருகின்றனர்.
உணவை சமைத்து முடித்து, அதில் எல்லா சுவைகளும் சரியாக உள்ளதா என்று மனிதர்கள் உணவை ருசி பார்ப்பதுண்டு.
இதே வேளையை செய்யவே இந்த ரோபோட்-க்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்ப்பது மட்டுமின்றி, அதில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதையும் ரோபோட் விளக்குகிறது
வரும் ஆண்டுகளில் மனிதர்கள் இன்று செய்து வரும் சமையல் வேலையையும் ரோபோக்கள் பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் இவை நாளடைவில் மனிதர்களை விட சிறப்பாக சமையல் செய்து விடுமோ என்ற அச்சம் மற்றும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இந்த ரோபோட்டே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர்.
முதற்கட்டமாக ரோபோக்கள் முட்டை பொறியல் மற்றும் தக்காளியை வெவ்வேறு விதமாக மென்று சாப்பிட பயிற்சி அளிக்கப்பட்டது.
மூன்று வெவ்வேறு நிலைகளில் மென்று சாப்பிடும் வழிமுறைகளை தொடர்ந்து ரோபோட் ஒன்பது விதமான முட்டை பொறியல் மற்றும் தக்காளிகளை சாப்பிட்டது.
இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு உணவிற்கான சுவையை ரோபோட் அறிந்து கொள்ளும்.
இதில் இருந்து கிடைக்கும் தரவுகளை கொண்டு ரோபோட் சமையில் கலையில் புகுத்தி, சிறப்பான சமையலை செய்திட வழிவகுக்கும்
மனிதர்களை போன்றே மென்று சாப்பிட்டு, சுவையை உணர வைக்கும் போது ரோபோக்களால் ஒருநாள் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு உணவு வகைகளை சிறப்பாக சமைக்க முடியும்.
மேலும் ஒவ்வொருத்தரின் விருப்பத்திற்கு ஏற்ப ருசியாகவும் சமைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.