பத்திரிகையாளரும் நகைச் சுவை நடிகரும் பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்திற்கு புகார். 

சென்னை 07 மே 2022 பத்திரிகையாளரும் நகைச் சுவை நடிகரும் பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்திற்கு புகார். 

பத்திரிகையாளரும் நகைச் சுவை நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நகைச்சுவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் அந்தரங்கம் மற்றும் நடிகர்கள் அந்தரங்கம் குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

இதற்கு பல நடிகைகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர் என்பதும் ஒரு சிலர் நேரடியாகவே அவரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் நான் உண்மையைத்தான் கூறுகின்றேன் என்றும் தான் சொல்லும் ஒவ்வொரு தகவலுக்கும் ஆதாரம் உள்ளது என்றும் கூறி வருவதாக தெரிகிறது.

சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பெண்கள் மீது அவதூறு பரப்பும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்த தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழகத் தலைவர், மற்றும் தமிழர் மக்கள் இயக்கம், நடிகர் கே.ராஜன்.

மற்றும் தமிழ் நாடு பத்திரிகையாளர் சஙக தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் !

உடன் தயாரிப்பாளர் பழனிவேல் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *