கோலங்கள், தென்றல்  உணர்ச்சி பூர்வமிக்க 2 குடும்பத் தொடர்கள் மே 16 முதல் கலர்ஸ் தமிழில் மீண்டும் ஒளிபரப்பு!

சென்னை 13 மே 2022 கோலங்கள், தென்றல்  உணர்ச்சி பூர்வமிக்க 2 குடும்பத் தொடர்கள் மே 16 முதல் கலர்ஸ் தமிழில் மீண்டும் ஒளிபரப்பு!

மே 16 திங்கள் முதல் துவங்கும் 2 தொடர்களையும் காண
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்  

சென்னை, மே 13,2022: பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், உணர்ச்சிபூர்வமிக்க தொடர்களான கோலங்கள் மற்றும் தென்றல் ஆகிய 2 மெகா தொடர்களை மே 16 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. இந்த தொடர்கள் பெண்களின் சிறப்புகளையும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் மதிப்புகளையும் உணர்த்தும் விதமாக இருக்கும். இந்த தொடர்கள் வரும் 16–ந்தேதி திங்கட்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும், 2 மணி முதல் 3 மணி வரையும் முறையே கோலங்கள் மற்றும் தென்றல் ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன. எனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் பொற்காலத்திற்கு மீண்டும் செல்லுங்கள். 

இந்த புதிய தொடர்கள் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் ராஜாராமன் கூறுகையில்,  எங்கள் தொலைக்காட்சி எப்போதுமே வலிமையான பெண் கதாபாத்திரங்களை பற்றிய கதைகளுக்கும், பெண்களையும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடும் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மீண்டும் நாங்கள் கோலங்கள் மற்றும் தென்றல் ஆகிய 2 மெகா தொடர்களை ஒளிபரப்புவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்கள் மிகவும் விரும்பும் நிகழ்ச்சிகள் ஆகும். எந்தவித சந்தேகமும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பு இருக்கும். பெரும்பாலான பெண்கள் மதிய நேரத்தில் ஓய்வு எடுக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் விரும்புவார்கள். அவர்களை மனதில் கொண்டே இந்த தொடர்கள் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகின்றன. எனவே வரும் வாரங்களில் உணர்ச்சிபூர்வமிக்க இந்த இரு தொடர்களையும் காணத் தயாராகுங்கள் என்று தெரிவித்தார்.

Read Also  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் "ஓ பெண்ணே" பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!!

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் தினசரி நிகழ்வுகளைக் கையாளும் கோலங்கள் தொடர் 1000 அத்தியாங்களை கடந்த முதல் தொடராகும். இது நடிகை தேவயானி நடித்த அபிநயா என்னும் கதாபாத்திரத்தை பற்றியதாகும். இதில் கடின உழைப்பாளியான லட்சியப் பெண் அபிநயா தன்னைச் சுற்றியிருப்பவர்களால் தன் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கிறாள். இந்த நிலையில் அவள் தனது மாற்றாந்தாய் மகன் ஆதித்யாவுடனான (நடிகர் அஜய் கபூர் நடித்துள்ளார்) போட்டியின் காரணமாக, சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடுகிறார். அவர் தனக்கென வலிமையான லட்சியங்களுடன் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் வாழ்க்கையை நடத்துகிறார். ஒரு இருண்ட கடந்த காலத்தில் சிக்கிய அவள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வணிகப் போட்டி மற்றும் தனக்கு எதிரான சதிச் செயல் ஆகியவற்றுக்கு இடையே தனது உறவுகளைக் எப்படி சிறப்பாக கையாண்டு தனது லட்சியத்தை அடைகிறாள் என்பதை இந்த தொடர் பிரதிபலிக்கிறது. இதில் நடிகை தேவயானி, தீபா வெங்கட், திருசெல்வம், அஜய் கபூர், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதற்கு டி. இமான் பின்னணி இசை அமைத்துள்ளார்.  

நடிகர்கள் ஸ்ருதி ராஜ், தீபக், ஹேமலதா, சுசேன் ஜார்ஜ் மற்றும் சுதா சந்திரன் ஆகியோர் தென்றல் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   இந்த தொடர் பெண்களின் கல்வியை வலியுறுத்துகிறது. இதில் துளசியாக நடித்துள்ள நடிகை ஸ்ருதி ராஜ், தனது ஒரே லட்சியமாக நன்றாக படித்து பொறியாளர் ஆக வேண்டும் என்பதே ஆகும். அவள் அவளுடைய தாயால் கைவிடப்பட்ட காரணத்தால், அவளுடைய குடும்பம் அவளை இகழ்ந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதையெல்லாம் தாண்டி அவள் எப்படி தனது கனவுகளை நனவாக்குகிறாள் என்பதே இதன் கதையாகும். இதற்கிடையில், தமிழ் (நடிகர் தீபக் தினகர்) துளசியை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட சோதனைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு இடையே  அவள் தனது இலக்கை அடைய எப்படி முயற்சி செய்கிறாள் என்பதே மீதமும் உள்ள கதையாகும்.

Read Also  நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை கட்டுபடுத்த தவறினால் பின்பு மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.    

கோலங்கள் தொடர் குறித்து நடிகை தேவயானி கூறுகையில், கோலங்கள் தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் தொலைக்காட்சியில் அறிமுகமாகி நடித்த தொடர்களில் இது எனக்கு மிகவும் பிடித்த தொடராகும். இந்த தொடர் பல பெண்கள் தங்கள் வீட்டைத் தாண்டி வெளியே வரவும், தொழில்களை மேற்கொள்ளவும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் வகையில் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. இது மீண்டும் ஒளிபரப்பாவதால், இன்னும் பல பெண்களை தைரியமாக இருக்கவும், அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கவும் இது தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரவித்தார்.

தென்றல் தொடர் குறித்து நடிகர் தீபக் தினகர் கூறுகையில், இந்த தொடரில் நடித்ததன் மூலம் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் உயர்ந்த இடத்தை எட்டியுள்ளேன். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பாவது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கருத்துப்படி, இந்த நிகழ்ச்சி தமிழ் பார்வையாளர்களிடையே ஒளிபரப்பப்பட்ட இளைஞர்களுக்கான முதல் தொடராகும். மேலும் இது பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும் இது இன்னும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி பற்றிய அதிக விழிப்புணர்வு தேவை என்பதையும் எடுத்துக் கூறுகிறது.

எனவே, இந்த தொடர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் அதே வேளையில், அவர்களை ஊக்கப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *